Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Bank Holidays in June 2022 Tamil: ஜூன் மாதத்தில் பேங்க் லீவு இத்தனை நாளா..?

Gowthami Subramani May 30, 2022 & 14:05 [IST]
Bank Holidays in June 2022 Tamil: ஜூன் மாதத்தில் பேங்க் லீவு இத்தனை நாளா..?Representative Image.

Bank Holidays in June 2022 Tamil: இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திற்கும், வங்கிகளுக்கு அளிக்கப்படும் விடுமுறை நாள்களில் பொதுவாக இருப்பது இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அளிக்கப்படும் விடுமுறைகள் ஆகும். இது தவிர்த்து, வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் குறிப்பிடப்பட்ட தினங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன் படி, 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் அளிக்கப்படக் கூடிய வங்கி விடுமுறை நாள்களையும், எந்த தினத்தில் அறிவிக்கப்படுகின்றன எனவும் இந்தப் பகுதியில் காண்போம் (Bank Holidays in June 2022 Tamil).

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்காக விடுமுறைகள் மொத்தம் எட்டு நாள்கள் ஆகும். இதில் இரண்டு நாள்களுக்கான விடுமுறைகள், Negotiable Instruments Act -ன் படி வழங்கக் கூடியதாகும். மீதமுள்ள ஆறு நாள்கள், ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் ஆகும் (June Month Bank Holidays 2022).

இதில், ஜூன் மாதத்தில் அளிக்கப்படக் கூடிய விடுமுறைக்கான காலத்தில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் வெவ்வேறு நகரங்களின் விடுமுறைகளைக் காணலாம் (Hoildays in June 2022). இந்தியாவில், பொதுவாக மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும். மேலும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

இதில் வரும் ஜூன் 2 ஆம் நாள், மகாபிராணா பிரதாப் ஜெயந்தியை முன்னிட்டு ஷில்லாங்கி வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில், கூட்டுறவு வங்கிகள், தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், பொதுத் துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் பிராந்திய வங்கிகளின் கிளைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஜூன் மாதம் 15 ஆம் தினத்தன்று, ராஜ சங்கராந்தி /  YMA தினம் / குரு ஹர்கோபிந்த் ஜியின் பிறந்தநாள் போன்றவற்றை முன்னிட்டு இந்த நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது (Bank Holidays in June 2022).

விடுமுறை நாள்கள் மற்றும் தேதி

விடுமுறைகள்

ஜூன் 2 & வியாழக்கிழமை

மகாராணா பிரதாப் ஜெயந்தி

ஜூன் 5 & ஞாயிறு

ஞாயிறு

ஜூன் 11 & சனிக்கிழமை

நான்காவது சனிக்கிழமை

ஜூன் 12 & ஞாயிறு

ஞாயிறு

ஜூன் 15 & புதன் கிழமை

YMA தினம்/குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்தநாள்/ராஜ சங்கராந்தி

ஜூன் 19 & ஞாயிறு

ஞாயிறு

ஜூன் 25 & சனிக்கிழமை

நான்காவது சனிக்கிழமை

ஜூன் 26 & ஞாயிறு

ஞாயிறு

மொத்தம்

8 நாள்கள்

மேற்கூறிய நாள்களில் வங்கிகளுக்கு வழங்கப்படக் கூடிய ஜூன் மாத விடுமுறைகள் ஆகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்