Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

அதிக ஓய்வூதியம் பெற இதை செய்ய வேண்டும் - கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்?

Abhinesh A.R Updated:
அதிக ஓய்வூதியம் பெற இதை செய்ய வேண்டும் - கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளுங்கள்?Representative Image.

நீங்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மூலம் அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது. ஆம், விண்ணப்ப காலக்கெடு ஜூன் 26, 2023, அதாவது இன்று முடிகிறது.

மீண்டும் மூன்று மாதம் காலநீட்டிப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலும், காலதாமதம் செய்யாமல் உடனடியாக அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி விண்ணப்பத்தை சமர்பிப்பது மிகவும் நல்லது.

முன்னதாக, மார்ச் 3 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. முதலில் மே 3 வரையிலும், பின்னர் ஜூன் 26ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. எனவே, தேவையான அனைத்து ஆவணங்களையும், நீங்கள் சேகரித்து இன்று உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.

தொடக்கத்தில், ஊழியர் ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து 1995ஆம் ஆண்டில், அரசு திட்டத்தை விரிவுபடுத்தி, தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களை சேர்க்க அனுமதி வழங்கியது. இந்த மாற்றமானது இத்திட்டத்தை அதிகமான மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியது. மேலும் இது இப்போது EPS-95 அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம்-1995 என அறியப்படுகிறது.

2014 செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் முன் பணியமர்த்தப்பட்ட EPFO ஊழியர்களும், அதற்கு பின் தொடர்ந்து பணிபுரிந்தாலும், ஊழியர் ஓய்வூதியத் திட்டமான EPS-இன் கீழ் கிடைக்கும் கூட்டு விருப்பத்தைப் பயன்படுத்த முடியாதவர்களும், அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என 2014-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் பணியாளர்கள் சார்பாக எந்தத் தொகையையும் செலுத்த வேண்டியதில்லை. நிறுவனம் வழங்கும் மொத்த 12 விழுக்காடு பங்களிப்பில், 8.33 விழுக்காடு மட்டுமே ஓய்வூதிய திட்டத்திற்குச் செல்கிறது. ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பு 15 ஆயிரம் என்பதால், அதற்கான EPS பங்களிப்பும் ரூ.1,250 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பங்களிப்பை மீறும் எந்த கூடுதல் தொகையும் EPF-க்கு செல்கிறது. இது உங்கள் ஊதியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

எனவே, நீங்கள் தகுதியுடையவராக இருந்து, அதிக ஓய்வூதியத்தைப் பெற விரும்பினால், காலக்கெடு முடிவடைவதற்குள் உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, அதில் கிடைக்கும் பயன்களை பெற்றுக்கொள்ளவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்