Thu ,Apr 18, 2024

சென்செக்ஸ் 72,616.44
-327.24sensex(-0.45%)
நிஃப்டி22,022.45
-125.45sensex(-0.57%)
USD
81.57
Exclusive

அரசின் அறிவிப்பு...ஆன்லைனில் ரேஷன் கார்டு அப்ளை...நேரடியா வீட்டிற்கே டெலிவரி!

Priyanka Hochumin Updated:
அரசின் அறிவிப்பு...ஆன்லைனில் ரேஷன் கார்டு அப்ளை...நேரடியா வீட்டிற்கே டெலிவரி!Representative Image.

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தபால் வழியாக வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழக சட்டமன்றத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் நடைபெற்றுள்ளது. அது குறித்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பல கருத்துக்களை முவைத்துள்ளார். அதனைப் பற்றிய விவரங்கள்,

தமிழகம் முழுவதிலும் உள்ள நியாய விலை கடைகளில் தரமான அரிசியை மக்களுக்கு தருவதை உறுதி செய்துள்ளோம்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு நேரடி கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். அதற்கு 3250 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வாழும் மக்கள் ரேஷன் அட்டையை தொலைத்து விட்டாலோ அல்லது அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது புதிய ரேஷன் அட்டையை வாங்க வேண்டும் என்றாலோ இடைத்தரகர்கள் மூலம் தான் வாங்க வேண்டியதாக இருந்தது. ஆனால் கடந்த 2020 முதல் ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பதிவை அமல்படுத்திய தமிழக அரசு. ஆனால் இந்த முறை அதில் இருந்து சற்று மேம்படுத்தி, புதிய ரேஷன் அட்டையை ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் தபால் வழியாக வீட்டிற்கு கொண்டு சேர்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்