Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

அது எப்புடி; இவங்களுக்கு மட்டும் வேணாம்! | Aadhaar Pan Link

Abhinesh A.R Updated:
அது எப்புடி; இவங்களுக்கு மட்டும் வேணாம்! | Aadhaar Pan LinkRepresentative Image.

பான் ஆதார் எண் இணைப்பு தான் இன்று பெரிதாக பேசப்பட்டு வரும் அரசு சான்றிதழ்கள் சார்ந்த செய்தி. இதற்கான காலக்கெடுவை அரசு நீட்டித்துள்ளது. எனினும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இது கட்டாயமில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நம் நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட சில மக்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு முடிவடையும் தேதி நெருங்கி வரும் நிலையில், இதிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரி (I-T) சட்டத்தின் பிரிவு 139AA இன் துணைப் பிரிவு (3) இன் விதிகளின் கீழ் அவர்களின் ஆதார் எண்ணை பான் அட்டையுடன் இணைக்காமல் இருந்தாலும், விலக்கு அளிக்கப்பட்டதன் காரணமாக அவர்களின் PAN அட்டை செயலிழக்காது. இந்த மக்கள் யார் என்பதை பார்க்கும் முன் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.

அது எப்புடி; இவங்களுக்கு மட்டும் வேணாம்! | Aadhaar Pan LinkRepresentative Image

பான்-ஆதார் இணைக்கும் முறை

  • வருமான வரியின் இ-ஃபைலிங் இணையதளத்தைப் பார்வையிடவும். https://www.incometax.gov.in/iec/foportal/ இணையதளத்தில்,  'விரைவு இணைப்புகள்' (Quick Links) என்ற பக்கத்திற்குச் செல்லவும்.
  • உங்கள் 10 இலக்க பான் எண்ணையும், 12 இலக்க ஆதார் எண்ணையும் உள்ளிட வேண்டும்.
  • பின்னர் பக்கத்தின் கீழே உள்ள வியூ லிங்கை கிளிக் செய்யவும்.
  • இரண்டும் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் பான் எண்ணும் ஆதார் எண்ணும் இணைக்கப்பட்டதாக ஒரு பாப்-அப் திரை தோன்றும். அதில் இருந்து வெளியேற ‘Close’ என்பதைக் கிளிக் செய்யவும்.

ஆதார் பான் இணைக்கப்படவில்லை என்றால், 'விரைவு இணைப்புகள்' (Quick Link) என்பதற்குச் சென்று, பின்னர் 'இணைப்பு ஆதார்' என்பதைக் கிளிக் செய்து, மேலே சென்று இரண்டு எண்களையும் இணைப்பதன் மூலம் எளிதாக இரண்டையும் இணைக்கலாம்.

அது எப்புடி; இவங்களுக்கு மட்டும் வேணாம்! | Aadhaar Pan LinkRepresentative Image

எஸ்.எம்.எஸ் மூலம் இணைப்பது எப்படி

உங்கள் பான்-ஆதார் இணைப்பை குறுந்தகவல் மூலமாகவும் சரிபார்க்கலாம். அவ்வாறு செய்ய, நீங்கள் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். UIDPAN என்று டைப் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். பின்னர் ஒரு இடைவெளி விட்டு பான் எண்ணை உள்ளிட வேண்டும் (UIDPAN <SPACE> AADHAAR NO <SPACE> PAN NO). நீங்கள் அவ்வாறு செய்தவுடன், பான்-ஆதார் இணைப்பு நிலை குறித்த தகவலை குறுந்தகவல் வாயிலாக தெரிந்து கொள்வீர்கள்.

அது எப்புடி; இவங்களுக்கு மட்டும் வேணாம்! | Aadhaar Pan LinkRepresentative Image

இதில் இருந்து விலக்கு யாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது

அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா மாநிலங்களில் வசிப்பவர்கள்; I-T சட்டம், 1961 இன் படி குடியுரிமை பெறாதவர்கள்; முந்தைய ஆண்டில் எந்த நேரத்திலும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள்; மற்றும் இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் ஆதார் பான் எண்ணை இணைக்கத் தேவையில்லை.

இவற்றில் எதுவாயினும், பான் எண்ணுடன் ஆதாரை தானாக முன்வந்து இணைக்க விரும்பும் மேற்கண்ட வகைகளில் உள்ள நபர்கள், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும், வழங்கப்பட்டுள்ள இந்த விலக்குகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றி அமைக்கப்படலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்