Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Open SBI Savings Account in Online: ஆன்லைனிலேயே SBI-ல் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம்..! இத மட்டும் செஞ்சா போதும்….

Gowthami Subramani August 23, 2022 & 14:15 [IST]
How to Open SBI Savings Account in Online: ஆன்லைனிலேயே SBI-ல் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம்..! இத மட்டும் செஞ்சா போதும்….Representative Image.

SBI வங்கியில் வங்கி கணக்கு திறக்க நினைக்கும் வாடிக்கையாளர்களே..! SBI-ல் சேமிப்பு கணக்கு திறப்பதற்கான வழிமுறைகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

வங்கி கணக்கு

நம்மிடம் பணம் இருக்கும் பட்சத்தில், நாம் ஏதாவதொரு செலவு செய்து விடுகிறோம். மேலும், இவ்வாறு நம்மிடம் பணம் இருக்கும் போது, நம்மால் முழுத் தொகையையும் செலுத்த இயலாது. இந்த காரணத்திற்காக, வங்கிக் கணக்கு திறந்து, வங்கியில் பணத்தைப் போட்டு வைப்பர். இது ஒரு பாதுகாப்பான மற்றும் நம்பகமான இடமாகக் கூறப்படுகிறது.

இந்தப் பதிவில், SBI மூலம் சேமிப்பு கணக்கைத் திறப்பதற்கான சில செயல்முறைகளைப் பற்றிக் காண்போம்.

SBI Savings Account in Online

வங்கிகளில் நாம் பணம் போடவோ, எடுக்கவோ தேவைப்படும் Savings Bank Account-ஐப் பெறுவதற்கு, நாம் வங்கிக் கிளைக்கு சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும். ஆனால், இவ்வாறு பதிவு செய்த பின் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகே வங்கிக் கணக்கு Active ஆகும். குறிப்பாக, இதற்கு எந்தவொரு காலக்கெடுவும் சரியாக கொடுக்கப்பட மாட்டாது..

இதுவே ஆன்லைன் மூலம், வங்கிக் கணக்கு திறப்பதற்கு Apply செய்யும் போது, ஒரே நாளில் அப்ளை செய்து விடலாம். அதன் பின், நாம் அப்ளை செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு இதனை வங்கியில் கொடுத்தால், KYC Verification செய்த பின்னர், Bank Passbook-உம் உங்களுக்குக் கிடைத்து விடும்.

தேவையான ஆவணங்கள்

SBI-ல் வங்கி கணக்கு திறப்பதற்கு கீழ்க்கண்ட ஆவணங்களைப் பெற்றிருப்பது அவசியம்..

  • ஆதார் அட்டை
  • பான் கார்டு
  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம் – 2

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக, SBI Savings Account-ஐ திறக்கலாம்.

முதலில், பயனாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் STARTNOW என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்தபின், அதன் கீழ் உள்ள Fill New Customer Information Form என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, அந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சரியாக நிரப்ப வேண்டும்.

அதில் கேட்கப்பட்டுள்ள தகவலில், PAN எண்ணைக் குறிப்பிட வேண்டும். PAN Card இல்லாதவர்கள், அதன் கீழ் உள்ள படிவம் 60/61 என்பதைத் தேர்வு செய்து அதனை நிரப்ப வேண்டும்.

பிறகு, KYC Document என்று இருக்கும் இடத்தில், Yes என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும். அதன் பின், ID Type என்ற இடத்தில், ஏதாவது ஒரு ஆவணத்தைத் (Document) தேர்வு செய்யவும்.

இவ்வாறு தேர்வு செய்த Document Number மற்றும் அந்த Document யாரால் வழங்கப்பட்டது மற்றும் வழங்கப்பட்ட தேதி உள்ளிட்ட தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

நீங்கள், தேர்வு செய்யும் ஆவணத்தில் உள்ள முகவரி மற்றும் மேலே கூறப்பட்ட முகவரி இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும். இதில், ஆதார் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, Proceed என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு, SCRN என்ற எண் தோன்றும். இந்த எண்ணைக் குறித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, Save and Proceed என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்த பிறகு, Proceed பட்டனுக்கு மேல், Yes மற்றும் No என்ற Option இருக்கும்.

இதில், பயனர்கள், Single Account மட்டும் Open செய்கிறார்கள் என்றால், No என்பதைத் தேர்வு செய்து, Proceed என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

வங்கிக்கணக்கு தகவல்

அந்தப் பக்கத்திலேயே, Account Information Section என்று வரும். இந்தப் பக்கத்தில், பயனர்கள் தங்களது வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதில், Details of Applicants-ல் நாம் இதற்கு முன்னரே எடுத்து வைத்த SCRN எண் மற்றும் மொபைல் எண்ணைக் கொடுக்க வேண்டும். அதன் பின்னர், Section Frist Holder Name என்ற இடத்தில் உங்கள் பெயர் தோன்றும்.

அதன் பின், பயனர்கள் திறக்கு5ம் வங்கிக் கணக்கை எந்த வங்கிக் கிளையுடன் இணைக்க நினைக்கிறீர்களோ, அந்த கிளையின் IFSC Code-ல் கடைசி 5 எண்களை கொடுத்து, Get Branch Name என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்தவுடன், IFSC Code-ற்கு ஏற்ற வங்கிக் கிளையின் பெயர் தெரியும்.

அதில், Additional Details என்ற பிரிவில், உங்களுக்கு தேவையான வசதிகளைப் பெற Yes என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது, Mobile Banking, Internet Banking, Debit Card உள்ளிட்ட சேவைகளில் உங்களுக்குத் தேவையான வசதிக்கு Yes என்றும், உங்களுக்குத் தேவையில்லாத வசதிகளில் No என்றும் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பின், Proceed என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு, SARN எண் Generate ஆகும். இதையும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, Save and Proceed என்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்த பிறகு, அந்தப் பக்கத்திலேயே புதிதாக ஒரு பக்கம் தோன்றும். இதில் Ok என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு, மீண்டும் முதல் பக்கத்தில் வந்து நிற்கும். இதில், Print Account Opening Formஎன்பதைக் க்ளிக் செய்து கொள்ள வேண்டும்.

அப்போது, அந்தப் பக்கத்தில் தோன்றும், Image Code, SARN Number மற்றும் பயனர்களின் Date of Birth உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்து, Proceed என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். அப்போது ஒரு படிவம் தோன்றும்

அந்தப் படிவத்தை பதிவிறக்கி, அத்துடன் ஆதார் அட்டை, பான் அட்டை, மற்றும் புகைப்படங்கள் 2 போன்றவற்றை எடுத்துக் கொண்டு வங்கிக்குச் செல்ல வேண்டும்.

இவற்றை வங்கியில் கொடுத்த பிறகு, பயனர்களுக்கான வங்கிக் கணக்கு Open செய்து, Passbook-ஐயும், கொடுத்து விடுவார்கள்.

முக்கிய குறிப்பு: ஆன்லைனின் அப்ளை செய்து வங்கிக் கணக்கை திறப்பவர்கள், அப்ளை செய்த ஒரு மாதத்திற்குள்ளேயே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், அது காலாவதி ஆகிவிடும். பிறகு, மீண்டும் புதியதாக மேலே கூறப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.

இத்துடன், வங்கிக்குச் செல்லும் போது, மேலே கூறப்பட்ட ஆவணங்களின் அசல் மற்றும் நகல்கள் என இரண்டையும் எடுத்துச் செல்ல வேண்டும்.

Tags:

How to open SBI savings account online in tamil, Steps to open SBI savings account in tamil, How to open sbi savings account in online, SBI account opening online 2022, How to open sbi account online, Online saving account opening, online saving account opening sbi, How to Open SBI Savings Account in Online


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்