Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Change Branch in Indian Bank: இந்தியன் வங்கி கிளையை மாத்தணுமா..? ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றுவதற்கான வழிமுறைகள்…

Gowthami Subramani July 07, 2022 & 14:00 [IST]
How to Change Branch in Indian Bank: இந்தியன் வங்கி கிளையை மாத்தணுமா..? ஆன்லைன் மூலம் எளிதாக மாற்றுவதற்கான வழிமுறைகள்… Representative Image.

How to Change Branch in Indian Bank: இந்தியன் வங்கி கிளை மாற்றுவதற்கு இனி கஷ்டப்பட தேவையில்லை. இந்த சுலபமான முறையில் ஆன்லைன் மூலமாகவே, வங்கியின் கிளையை மாற்றிக் கொள்ளலாம் (How to Change Branch in Indian Bank).

வங்கிக் கிளை மாற்றுவது

இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களா நீங்கள்..? நீங்கள், வங்கி கிளையை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறீர்களா..? பல்வேறு காரணங்களால், வங்கி கிளையை மாற்றுவதற்கான வழியைத் தேடி கொண்டிருக்கிறீர்களா..? இந்த முறையைப் பயன்படுத்தி சுலபமான முறையில் வங்கி கிளையை மாற்ற முடியும்.

பெரும்பாலும், வங்கி கிளையை மாற்றுவதற்கு வங்கிக்குச் செல்ல வேண்டியதாக இருக்கும். இதனால், வங்கிக் கிளையை மாற்றுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும். அதே சமயம், ஒருவர் வேலை இடத்தில் அக்கவுண்ட் திறந்து உபயோகித்த பின், மீண்டும் அவர் வேலை செய்யும் இடத்தை மாற்றும் சமயத்தில் கிளையையும் மாற்ற நினைப்பர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எதிர்பாராத விதமாக, அவர் புதிய இடத்திற்குச் சென்று விட்டு, அக்கவுண்ட் திறந்த வங்கியில் கிளையை மாற்ற நினைத்தால், சிறிது சிரமமாக இருக்கும்.

மேலும், வேறு வீட்டிற்கு குடி பெயர்ந்து செல்வது, பணி ஊழியர்கள் மீதான அதிருப்தி உள்ளிட்டவற்றின் காரணமாக, கிளையை மாற்ற முடிவு செய்திருப்பர். அவர்கள், அனைவரும் கீழ்க்காணும் முறையின் மூலம் அக்கவுண்ட்-ஐ மற்றொரு கிளைக்கு மாற்ற முடியும்.

இந்தியன் வங்கி அக்கவுண்டை மற்றொரு கிளைக்கு ஆன்லைனில் மாற்றுவது  எப்படி? (How to Change Branch in Indian Bank Online)

கீழே குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி இந்தியன் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கிளையை மாற்றிக் கொள்ளலாம்.

  • முதலில் இந்தியன் வங்கிக்கான மொபைல் பேங்கிங்-ஐ திறக்க வேண்டும்.
  • பின், அதில் Login செய்து e-service என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு, ஸ்கிரீனில் வரும் Change Home Branch என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இதற்கு அடுத்ததாக, இந்திய வங்கி கிளையை மாற்ற விரும்பும் நபர்கள் அக்கவுண்ட் நம்பரைத் தேர்வு செய்து, அதன் பின் நீங்கள் விரும்பக்கூடிய புதிய கிளையின் IFC Code-ஐ உள்ளிட வேண்டும். இவ்வாறு புதிய கிளைக்கான IFC Code-ஐ Enter செய்த பிறகு, புதிய கிளையின் Code, முகவரி, மற்றும் கிளையின் பெயர் உள்ளிட்டவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
  • அதன் பின், தேர்வு செய்யப்பட்ட விவரங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில் அதனை உறுதி செய்து, கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பித்த பிறகு, நீங்கள் விருப்பப்பட்ட கிளைக்கு அக்கவுண்டை மாற்றிக் கொள்வதற்கான கோரிக்கை சமர்ப்பிக்கப்படும். மேலும், 15 முதல் 20 நாள்களில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும்.

சரிபார்த்துக் கொள்ளுதல்

பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் அக்கவுண்ட், சரியாக தேர்வு செய்த கிளைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். இதனை, மொபைல் பேங்கிங் சென்று அதில் உள்ள அக்கவுண்ட் விவரங்களைச் சரிபார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

அதன் படி, மொபைல் பேங்கிங்-ல் அக்கவுண்ட் என்ற மெனுவின் கீழே இருக்கும் Account Details என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் புதிய வங்கிக் கிளை Code, IFC Code, மற்றும் கிளையின் பெயர் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும்.

இவ்வாறு சரிபார்க்கும் போது, உங்கள் புதிய கிளையின் பெயர் இருந்தால், உங்களது அக்கவுண்ட் கிளை மாற்றப்பட்டுள்ளதை உறுதி செய்யலாம். இந்த எளிய முறையைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே, வங்கிக் கிளையை விருப்பமான இடத்திற்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். குறிப்பாக, இந்த எளிய முறையில் இந்திய வங்கி கிளையை மாற்றும் வசதி இந்தியின் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Change Branch in Indian Bank | How to Change Branch in Indian Bank Online | Indian Bank Branch Change Online | How to Change Branch in Indian Bank Online | How to Change Branch in South Indian Bank | How to Change Indian Bank account to Another Branch | How to Change Bank Branch Indian Bank | How to Change Home Branch in Indian Bank | Indian Bank Branch Change Form | Indian Bank Near Me | Indian Bank Net Banking | Indian Bank Address Change Online | Indian Bank Online Branch Transfer | Indian Bank Customer Care | Indian Bank Account Transfer | Indian Bank address Change letter


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்