Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபிக்ஸ்டு டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய ICICI வங்கி…! மகிழ்ச்சியில் சேமிப்பாளர்கள்…

Gowthami Subramani August 26, 2022 & 15:40 [IST]
ஃபிக்ஸ்டு டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திய ICICI வங்கி…! மகிழ்ச்சியில் சேமிப்பாளர்கள்…Representative Image.

ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதன் படி, புதிதாக மாற்றப்பட்ட விகிதங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

Fixed Deposit என்றால் என்ன?

வங்கி வாடிக்கையாளர்கள், ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையைச் செலுத்தி, நிலையான வட்டி விகிதத்துடன் கூடிய ஒட்டு மொத்த தொகையைப் பெறுவார்கள். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டு அமைப்பாக உள்ளது. இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.15,000 செலுத்தலாம். மேலும், இதில் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குப் பின்னர் செலுத்தப்பட்ட தொகையை வட்டியுடன் சேர்த்து பெறலாம்.

ICICI-யின் புதிய அறிவிப்பு

தனியார் துறை நிறுவனமாக விளங்கும் ICICI வங்கி, ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை ரூ.5 கோடியாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ICICI வங்கி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டதாவது, இந்த புதிய விகிதங்கள் ஆகஸ்ட் 26 ஆம் நாளான இன்று முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் படி, இன்று முதல் ICICI வங்கியானது 7 நாள்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை 3.50% முதல் 5.90 வரையாக மாற்றியுள்ளது.

புதிதாக மாற்றப்பட்ட ICICI வங்கி FD வட்டி விகிதங்கள்

தற்போது, ICICI வங்கி புதிதாக விகிதங்களை மாற்றியுள்ளது. இதில், மாற்றப்பட்டுள்ள விகிதம் மற்றும் இடைப்பட்ட காலத்தையும் பற்றி காண்போம்.

 

முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத் தொகைக்கான காலம்

நிலையான வைப்புத்தொகைக்கு மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள்

7 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை

3.50%

30 நாட்கள் முதல் 45 நாள்கள் வரை

3.60%

46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை

4.00%

61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை

4.75%

91 நாள்கள் முதல் 184 நாள்கள் வரை

5.25%

185 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை

5.40%

271 நாள்கள் முதல் 1 வருடத்திற்குள்

5.60%

1 வருடம் முதல் 5 ஆண்டுகள்

6.05%

5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை

5.90%

ஐசிஐசிஐ வெளியிட்ட அறிக்கையின் படி, வங்கி வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் மற்றும் கிளை சேனல் மூலம், அவர்களின் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்யலாம். மேலும், ஐசிஐசிஐ வங்கியின் Fixed Deposit மூலம் அதிக FD வட்டி விகிதங்களுடன் சேமிப்பைப் பெருக்கலாம்.

 

தற்போதைய நிதி பொருளாதார நெருக்கடி சூழலில், உறுதியளிக்கப்பட்ட மற்றும் உத்திரவாதமான வருமானத்தைப் பெறுவதற்கு இத்தகைய முறையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Tags:

Fixed Deposit Interest Rate in ICICI bank | Fixed Deposit Interest Rates in ICICI bank Calculator | Interest Rate for nre Fixed Deposit in ICICI bank | Fixed Deposit Interest Rate in ICICI bank 2022 | Interest Rate on FD in ICICI bank 2022 | Interest Rate for FD ICICI | What is the Rate of Interest on FD in ICICI bank | FD calculator | SBI Fixed Deposit Rates | ICICI bank FD Interest Rates 2022 | SBI FD Interest Rates 2022 | HDFC FD Interest Rates 2022 | HDFC FD Interest Rates | ICICI bank Interest Rates | Axis bank FD Rates


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்