Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைனில் இலவசமாக சிபில் ஸ்கோரை செக் செய்வது எப்படி?

Gowthami Subramani July 25, 2022 & 15:45 [IST]
ஆன்லைனில் இலவசமாக சிபில் ஸ்கோரை செக் செய்வது எப்படி?Representative Image.

How to Find My Cibil Score Online Free: சிபில் ஸ்கோரைப் பற்றி அனைவருமே கட்டாயம் தெரிந்திருப்பது அவசியம் ஆகும். தனி ஒரு மனிதன் தனது வாழ்நாளில் எந்தெந்த பயன்பாட்டுக்காக லோன் வாங்கியுள்ளார், எவ்வளவு ரூபாய் வாங்கியுள்ளார், கடனை திருப்பிச் செலுத்தியுள்ளாரா உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் கண்டறிய முடியும். இவ்வாறு அவர்கள் வாங்கிய கடனைச் சரியான முறையில் திருப்பிச் செலுத்தியிருக்கிறார் அல்லது செலுத்தி வருகிறார் என்றால், அவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறையாமல் இருக்கும்.

சிபில் ஸ்கோர் குறித்த விவரங்களையும், ஆன்லைனில் உங்களுடைய சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்வது பற்றியும் இதில் காணலாம்.

ஆன்லைனில் சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி

சிபில் ஸ்கோரை ஆன்லைனில் இலவசமாக தெரிந்து கொள்ள https://www.cibil.com/ என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

பின், அதில் Free Annual Cibil Score Option என்பதைக் க்ளிக் செய்யவும்.

அந்தப் பக்கத்தில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி, மற்றும் PAN விவரங்களைச் சரியாகக் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும். அதனைப் பதிவு செய்து, க்ளிக் செய்யவும். இவ்வாறு செய்யும் போது ஒரு புதிய பக்கத்திற்குள் நுழைவோம்.

அப்போது, சிபில் ஸ்கோரைச் சரிபார்ப்பதற்கு பதிவு செய்யப்பட்ட உறுதிப்படுத்துதல் கிடைக்கும். அதில் சென்று சிபில் ஸ்கோர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால், ஆன்லைனில் சிபில் ஸ்கோர் சரிபார்க்கும் இந்த வழிமுறை ஒரு முறை மட்டுமே இலவசமாகக் காண முடியும்.

சிபில் ஸ்கோர் சரிபார்ப்புக்கான கட்டணம்

ஒரு முறை மட்டுமே இலவசமாகப் பார்க்கக் கூடிய இந்த சிபில் ஸ்கோரை, அதற்கு மேல் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும். அதன் படி, மாதத்திற்கு 550 ரூபாய் எனவும், 6 மாதங்களுக்கு 800 ரூபாய் எனவும், வருடந்தோறும் ரூ.1200 எனவும் கூறப்படுகிறது.

கட்டணம் செலுத்தி நாம் சிபில் ஸ்கோரைச் சரிபார்ப்பதில் எத்தனை முறை வேண்டுமானாலும், சரிபார்த்துக் கொள்ளலாம்.

கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை

சந்தா முறையில் கட்டணம் செலுத்தி சிபில் ஸ்கோரை சரிபார்ப்பவர்கள், அவர்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மெயில் ஒன்று வரும். அந்த மெயிலில் வந்த இணைப்பைக் க்ளிக் செய்து, மின்னஞ்சலில் பெறப்பட்ட ஓடிபியைக் கொடுத்து, பின்னர், உங்களுடைய பாஸ்வோர்டை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும் போது, உங்களுடைய விவரங்கள் அனைத்தும் இங்கு காணப்படும். பின், மொபைல் எண்ணைச் சமர்பித்தால், கடன் அறிக்கையையும், சிபில் ஸ்கோரையும் காண முடியும்.

இத்தகைய எளிமையான முறையில் சிபில் ஸ்கோரை சரிபார்த்துக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Find my Cibil Score Online Free | How to Find my Cibil Score for Free | How to Know Your Cibil Score Online | How can I Calculate my Cibil Score | How Check my Cibil | How to Check Online Cibil Score Free | Cibil Score Check Free Online by PAN Number | Cibil Score Check Online | Credit Score Check Free | Cibil Report | Cibil Login | What is Cibil Score | How to Find my Cibil Score Online | How should I Check my Cibil Score | How Check my Cibil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்