Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க கிட்ட இரண்டு PAN Card இருக்கா…! உடனே இத செய்யுங்க.. இல்லனா 10,000 அபராதம்..

Gowthami Subramani August 09, 2022 & 14:40 [IST]
உங்க கிட்ட இரண்டு PAN Card இருக்கா…! உடனே இத செய்யுங்க.. இல்லனா 10,000 அபராதம்.. Representative Image.

ஒரு நபர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பவராயின், கண்டிப்பாக ஒரு பான் கார்டை சமர்ப்பித்து விட வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பான் கார்டின் முக்கியத்துவம்

இந்தியாவில் பெரும்பாலும் பான் கார்டு வைத்துள்ளனர். அதன் படி, இந்திய குடிமக்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் பான் கார்டு வைத்திருப்பது மிகவும் அவசியம் ஆகும். இவ்வாறு, இந்திய அரசாங்கத்திடம் வரி கட்டும் நபர்கள் அல்லது வங்கிகளில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் நபர்கள் கட்டாயம் பான் கார்டு வைத்திருப்பது அவசியமாகிறது. அதாவது, பான் கார்டு என்பது நிரந்தர கணக்கு எண் ஆகும். இந்த பான் எண்ணான 10 இலக்க எண்கள் பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

வங்கியின் புதிய வாடிக்கையாளர்கள்

இவ்வாறு, வங்கியில் புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு பான் கார்டு அவசியம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு, புதிதாக வங்கிக் கணக்கு துவங்குவதற்கு மக்கள், ஆன்லைன் மற்றும் கம்ப்யூட்டர் சென்டருக்குச் சென்று பான் கார்டுகளைப் பெறுகிறார்கள்.

இவ்வாறு பான் கார்டு ஆன்லைன் வாயிலாகப் பெறும் போது, எதிர்பாராத விதமாக சில நேரங்களில் அது தொலைந்து விட வாய்ப்பு உண்டு. எனவே,  இந்த சூழ்நிலையில், அவர்கள் மீண்டும் அப்ளை செய்கிறார்கள். இதனால், அவர்களிடம் இரண்டு பான் கார்டுகள் இருப்பது போலத் தோன்றும்.

சட்டப்படி குற்றம்

இன்னும் ஒரு சிலர், டிமேட் மற்றும் வருமான வரி என தனித்தனியே பான் கார்டுகளை வைத்திருப்பர். இது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது குற்றம் ஆகும். மேலும், இவ்வாறு இரண்டு பான் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு பான் கார்டு இருப்பின், அவற்றில் ஒன்றை சமர்ப்பிக்கும் முறை

ஒரு நபருக்கு இரண்டு பான் கார்டு இருத்தல் கூடாது. இவ்வாறு வைத்திருப்பின், அதை எப்படி சமர்ப்பிக்கலாம் என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

முதலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும்.

இரண்டு பான் கார்டுகள் வைத்திருப்பின், அவற்றில் ஒன்றை சமர்ப்பிப்பதற்கு ஒரு படிவம் வழங்கப்படும்.

அந்த படிவத்தில், தொடர்ந்து எந்த பான் எண்ணை பயன்படுத்த விரும்புகிறீர்களோ அந்த எண்ணை குறிப்பிட்டு மீதமுள்ள பான் தகவலை Form No 11 படிவத்தில் நிரப்ப வேண்டும்.

இந்தப் படிவத்துடன், ரத்து செய்யப்பட வேண்டிய பான் கார்டின் நகலை இணைக்க வேண்டும்.

இந்த முறையை பயன்படுத்தி, இரண்டு பான் கார்டு வைத்திருப்பவர்கள் வருமான வரித்துறைக்கு அபராதத் தொகை வழங்குவதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

I Have Two PAN Cards How to Cancel One | Two PAN Cards with different Date of birth | Two PAN Cards with Same Mobile Number | How to get multiple PAN Card | Dual PAN Card Check | I Have Two PAN Cards How to Cancel One online | How to check How many PAN Card I Have | NSDL | PAN Card Cancellation Request letter Format | I Have 2 PAN Cards What to Do | Can I Surrender my PAN Card and apply for new One | PAN Card Cancellation online | PAN Card Cancellation Request letter Format pdf | PAN Card Cancellation Form | NSDL PAN Surrender | Surrender PAN Card UTI


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்