Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelines

Priyanka Hochumin Updated:
ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelinesRepresentative Image.

இப்போ எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது, அதனால் இந்த காலத்து இளைஞர்கள் டெக்னாலஜியில் பூந்து விளையாடுவார்கள். ஆனால் நமக்கு முன்னர் ஜெனெரேஷன் இதில் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் அனுப்பும் வேலை இருக்கே, சொல்லவா வேணும். நாம் அனுப்பிய பணம் சரியாக போய் சேருமா சேராதா என்று பதற்றத்திலையே இருப்பார்கள். ஒருவேளை நாம் அனுப்பிய பணம் குறிப்பிட்ட நபருக்கு போய் சேர வில்லை என்றால் என்ன செய்யலாம் என்பதை தான் இந்த பதிவில் பாப்போம்.

ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelinesRepresentative Image

பணம் பரிமாற்றத்திற்கு எது முக்கிய?

டிஜிட்டல் முறையில் பணம் பரிமாற்றம் செய்ய NEFT, RTGS, IMPS, UPI ஆகிய வழிகளில் செய்யலாம். இப்படி நம்முடைய வங்கி கணக்கில் இருந்து மற்றவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்ப - அவருடைய பெயர், வங்கிக் கணக்கு எண், வங்கியின் பெயர், வங்கிக் கிளையின் பெயர், IFSC code மற்றும் UPI ID போன்ற அனைத்து விவரங்களும் தேவைப்படுகிறது. எனவே, இந்த விவரங்களை கொடுக்கும் போது ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து கொடுக்கவும்.

சரி அப்படி அந்த விவரங்களை தரும் போது ஏதேனும் ஒரு எண் மாறி விட்டால், உங்கள் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்படும். ஆனால் நீங்கள் தவறுதலாக தந்த வங்கிக் கணக்கு இல்லவே இல்லை என்றால் ஒன்றில் இருந்து மூன்று நாட்களுக்குள் கிரெடிட் ஆகிவிடும். அப்படியும் பணம் வரவில்லை என்றால், நீங்கள் வங்கிக்கு சென்று புகார் அளிக்கலாம். அவர்கள் பண்ணத்தை உங்கள் அக்கவுண்டிற்கு மாற்றி விடுவார்கள்.

ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelinesRepresentative Image

அப்படி ஒரே வங்கியில் தவறு நடந்தால்....

அதாவது உங்களுடைய வங்கி கணக்கும், நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய நபரின் வங்கி கணக்கும் ஒன்றாக இருக்கலாம். அப்படி இருந்தால் தகுந்த ஆதாரங்களை சேகரித்து வங்கியில் புகார் அளிக்க வேண்டும். ஒரு சில இக்கட்டான நேரங்களில் பணம் தவறுதலாக அனுப்பப்பட்டவரின் ஒப்புதல் பெற்று உங்கள் பணத்தை கொடுத்து விடுவார்கள். இதற்கு சில நாட்கள் ஆகலாம், அதுவரை காத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelinesRepresentative Image

அப்ப வேற வேறையா இருந்தா?

இல்ல உங்களுடையதும் நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பியவரின் வங்கியும் வேற வேறையாக இருந்தால் கொஞ்சம் சிக்கல் தான். அப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் பணம் அனுப்பிய ஷ்கிரீன் ஷாட், வங்கி கணக்கு எண், நேரம் இப்படி அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து உங்களுடைய வங்கியிடம் புகார் அளிக்க வேண்டும். அவர்கள் அந்த வங்கியிடம் பேசி பிரச்சனையை முடித்து பணத்தை பெற்றுத் தருவார்கள். இதற்கு எவ்ளோ நாள் ஆகும் என்று சரியாக கூற முடியாது, நீங்கள் பொறுமை காத்திருப்பது அவசியம்.

அப்படி நீங்கள் தவறுதலாக பணம் அனுப்பிய நபர் திரும்ப தர மறுத்துவிட்டால் நீங்கள் தான் சட்ட ரீதியாக போராட வேண்டும். அதற்குதேவையான ஆவணங்களை இரண்டு வங்கியும் உங்களுடம் கொடுத்து விடும். ஆனால் மற்றதை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் பணம் அனுப்பி...உங்கள் பணம் பறிபோய் விட்டதா...அதற்கு என்ன செய்ய வேண்டும்? | online transaction guidelinesRepresentative Image

பணத்தை அனுப்பும் முன் என்ன செய்யணும்!

  • முதலில் பணம் அனுப்புபவரின் விவரங்களை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்க வேண்டும்.
  • ஒருவேளை நீங்கள் பெரிய தொகையை அனுப்ப வேண்டிய நிலையில் இருந்தால், முதலில் ரூ.10 அல்லது ரூ.20 அனுப்பிவிட்டு அவரிடம் உறுதி செய்து விடும் மீதியை அனுப்பவும்.
  • ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் நம்முடைய போனுக்கு மெசேஜ் வரும். அதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
  • இதையும் தாண்டி தவறு ஏற்பட்டால் முதலில் தவறு நடந்ததிற்கான ஆதாரங்களை சேகரித்து வைக்கவும்.
  • ஒருவேளை சம்மந்தப்பட்ட வங்கியில் புகார் அளித்து எந்த பயனும் இல்லை என்று தெரிந்துகொண்டால், நீங்கள் தாராளமாக RBI Ombudsman பிரிவிடம் ஆன்லைனில் புகார் அளிக்கலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்