Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Repo Rate Increase Update: ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… இனி லோன் வாங்கி வீடு கட்டுறதுலாம் ரொம்ப கஷ்டம்

Gowthami Subramani June 08, 2022 & 16:45 [IST]
Repo Rate Increase Update: ரெப்போ வட்டி விகிதம் உயர்வு… இனி லோன் வாங்கி வீடு கட்டுறதுலாம் ரொம்ப கஷ்டம்Representative Image.

Repo Rate Increase Update: ரிசர்வ் வங்கி அறிவித்த அதிரடி அறிவிப்பால், வீட்டு கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும்.

வட்டி விகிதம் உயர்வு

ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் தலைமையில், நாணயக் கொள்கைக் கூட்டம் இன்று அதாவது ஜூன் 8 ஆம் நாள் நடைபெற்றது. இதில் கூறியுள்ள படி, ரிசர்வ் வங்கி தரப்பிலிருந்து வங்கிகளுக்கு அளிக்கப்பட்டும் கடன்களில் ரெப்போ வட்டி விகிதம் 4.90 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது (MPC Meeting Outcome Today). இதற்கு முன்னரே இருந்த வட்டி விகிதத்தில் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாகும்.

இந்த வட்டி உயர்வால், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கக் கூடிய பல்வேறு கடன்களுக்கான வட்டியும் உயர்த்தப்படும். அதிலும், குறிப்பாக வீடு கட்டுவதற்காக வாங்கப்படும் லோன்களுக்கு இனி அதிக அளவிலான ஈஎம்ஐ மற்றும் வட்டி செலுத்துவதாக இருக்கும் (Repo Rate Increase).

காரணம்

ரிசர்வ் வங்கியின் இந்த பரபரப்பான அறிவிப்புக்கு முக்கிய காரணம், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையே நடந்த போரால், உலகளாவிய வகையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் பண வீக்கம் காரணமாகும். மேலும், இந்தப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலே, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 4.9 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால், பெரும்பாலானோர் பாதிக்கப்படுவர். வங்கிகளில் பல்வேறு பயன்பாட்டிற்காகக் கடன் வாங்கிய அனைவரும் இதனால் பாதிக்கப்படுவர் என கருதப்படுகிறது (RBI MPC Latest News).

இது குறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் அந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாவது, இந்திய பொருளாதாரம் நிலையாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிக்காகவே, ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என கூறினார்.

இரண்டாவது முறையாக

ரிசர்வ் வங்கியின் இந்த செயல்பாட்டால், அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி, ரெபோ வட்டி விகிதம் கடந்த 5 வாரங்களில் மட்டும் இரண்டாவது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது (Repo Interest Rate for Home Loan).

மேலும், இது முற்றிலும் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதன் எண்ணத்தில் எடுக்கப்பட்டது. கடந்த 3 நாள்களாக ரிசர்வ் வங்கியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த வட்டி விகித உயர்வு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகும்.

வட்டி உயர்வின் தாக்கம்

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், வட்டி விகிதம் உயர்ந்ததினால் கடன் வாங்கியவர்கள் கூடுதல் அளவிலான தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாக வங்கியில் கடன் வாங்கிய அனைவருக்கும் பெரிய அளவில் திண்டாட்டம் ஏற்படும் எனக் குறிப்பிடப்படுகிறது. வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் பெரும் தொகையை செலுத்த வேண்டிய காரணத்தால், அவர்களது வாழ்நாளில் இது ஒரு பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை (Repo Rate Increases Again).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்