Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Swiss Bank Statement 2022: அடேங்கப்பா..! இத்தன பணமா..? இந்தியர்கள் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் தான்….!

Gowthami Subramani June 17, 2022 & 15:15 [IST]
Swiss Bank Statement 2022: அடேங்கப்பா..! இத்தன பணமா..? இந்தியர்கள் பணம் எல்லாம் சுவிஸ் வங்கியில் தான்….!Representative Image.

Swiss Bank Statement 2022: இந்தியர்களின் சேமிப்பு சுவிஸ் வங்கிகளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன (Swiss National Bank Rate 2022).

சுவிஸ் வங்கிகள்

கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்களின் பணம் ஒட்டுமொத்தமாக ரூ. 30,500 கோடி சுவிஸ் வங்கிகளில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது கடந்த 2020 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, சுமார் 10,000 கோடி ரூபாய் அதிகம் எனவும், அதிலும், இந்தியர்களின் பணம் ரூ.20,700 கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் இருந்தது எனவும் கூறப்பட்டு வந்தது (Swiss Bank Statement 2022).

பாதி அளவு அதிகம்

இந்நிலையில், 2020 ஆம் ஆண்டு ரூ. 20,700 கோடியாக இருக்கப்பட்ட இந்தியர்களின் பணமதிப்பு தற்போது, ஒரே ஆண்டில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வாகி தற்போது ரூ. 30,000 கோடிக்கு மேல் உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன் படி, கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த தொகை மிகப் பெரிய தொகையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (Indian Money in Swiss Bank).

கோடிக்கணக்கில் உயர்வு

அதன் படி, கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது சுவிஸ் பேங்கில் இருக்கும் இந்தியர்களினுடைய சேமிப்புக் கணக்கில் 4,800 கோடி அளவு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மத்திய வங்கி தெரிவித்த தகவல் ஆகும் (Swiss Bank Details 2022 About Indian Money). ஏழு ஆண்டுகள் இத்தனை கோடி ரூபாய் இந்தியர்களின் சேமிப்புக் கணக்கில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

குறைந்தும் ஏறிய பணத்தொகை (Swiss National Bank Rate Increases)

அறிவிப்பின் படி, கடந்த 2006 ஆம் ஆண்டு மட்டும் இந்தியர்களின் பணம் சுவிஸ் பேங்கில் 6.5 மில்லியனாக இருந்தது. ஆனால், 2011, 2013, 2017, மற்றும் 2020 என தொடர்ந்து ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யக்கூடிய தொகை மிகவும் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது (Swiss Bank Details in Tamil). மேலும், 2019 ஆம் ஆண்டில் டெபாசிட் பணத்தின் அளவு குறைந்தாலும், அடுத்த ஆண்டான 2020 ஆம் ஆண்டில் மிகப்பெரிய எழுச்சி தோன்றியது குறிப்பிடத்தக்கது (Indians Amount in Swiss Bank Details).

மீண்டும் கருப்புப்பணம் ஏற்றமா?

சுவிஸ் வங்கிகளில் கணக்குகள் அனைத்துமே, இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகள், தனி நபர் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் போன்ற அனைத்து வகையான நிதிகளையும் அடிப்படையாகக் கொண்டே இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Swiss Bank Savings for Indians).

அதே சமயத்தில், சுவிட்சர்லாந்து தேசிய வங்கியில் இந்தியர்கள் வைத்திருக்கும் முழுத் தொகையையுமே கருப்புப் பணம் எனக் கூற முடியாது. மேலும், அவர்களை வரி மோசடி செய்யும் நபர்களாகவும் கருத முடியாது என சுவிஸ் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆண்டுதோறும் தகவல் பரிமாற்றம்

இந்தியா மற்றும் ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே நடைபெற்றது. அதன் படி, 2018 முதலே, ஒவ்வொரு ஆண்டும் வங்கிக் கணக்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்விட்சர்லாந்து வழங்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் வரி செலுத்தும் அமைப்புக்குச் செல்கிறது. இதன் மூலம், மோசடி செய்யும் இந்தியர்களைக் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்திய அதிகாரிகளிடம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்