Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உங்க PF அக்கவுண்டில் ரூ.40000 டெபாசிட்..? யாரெல்லாம் எப்படி பெறலாம்? முழு விவரங்களும் இங்கே..

Gowthami Subramani August 04, 2022 & 09:25 [IST]
உங்க PF அக்கவுண்டில் ரூ.40000 டெபாசிட்..? யாரெல்லாம் எப்படி பெறலாம்? முழு விவரங்களும் இங்கே..Representative Image.

EPFO அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு ஒர் மகிழ்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியாகவே EPFO செயல்படுகிறது. இவ்வாறு, ஊழியர்கள் பெற்றிருக்கும் அக்கவுண்டில் EPFO 40000 ரூபாயை டெபாசிட் செய்வதாக உள்ளது. EPFO வழங்கும் இந்த தொகையை யாரெல்லாம் பெறலாம்..? எப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

ஊழியர்களுக்கான PF கணக்கு

வருங்காலத்திற்காக சேமித்து வைக்கப்படுவதற்கு மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட பணம் PF அக்கவுண்டில் சேர்க்கப்பட்டு, பணம் தேவைப்படும் நேரத்தில் ஊழியர்களின் விருப்பத்திற்கேற்ப பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் வட்டியே EPFO தற்போது வழங்கவுள்ளது.

அக்கவுண்டில் சேரும் ரூ.40,000 தொகை

EPFO விரைவில் ஒரு பெரிய தொகையை ஊழியர்களின் அக்கவுண்டில் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இந்த EPFO அக்கவுண்ட் கணக்கில் நாடு முழுவதும் 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர் என்று குறிப்பிடப்படுகிறது. EPFO அறிவித்த இந்த அறிக்கையில் EPFO அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களுக்கு ரூ. 40,000 டெபாசிட் செய்வதாகக் கூறப்படுகிறது.

EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, வெளியிட்ட அறிவிப்பின் படி விரைவில் PF அக்கவுண்ட் வைத்திருக்கும் நபர்களின் கணக்கில் உறுதியாக டெபாசிட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, ரூ.40,000 பிஎஃப் அக்கவுண்டில் செலுத்தப்படுவது யாருக்கெலாம் என்ற விவரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

யாருக்கு இந்த நிதி

ஊழியர்கள் அவர்களது PF கணக்கில் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் வைத்திருப்பவராயின், அந்த நபர்களுக்கு இந்த தொகை கிடைக்கும். அதாவது, PF அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் அக்கவுண்டில் 5 லட்சம் அல்லது அதை விட அதிகமாக இருப்பின், ரூ.40000 அவர்களுக்கு அக்கவுண்டில் சேர்க்கப்படும். இவ்வாறு இந்தத் தொகைய பெற தகுதியானவர்களின் கணக்குகளில் EPFO விரைவில் டெபாசிட் செய்யும் என உறுதியாகத் தெரிவித்துள்ளது.

எப்போது இந்த தொகை கிடைக்கும்?

EPFO அறிவித்த பின், எல்லோருக்கும் வரக்கூடிய முதல் கேள்வி எப்போது இந்த தொகை PF கணக்கில் செலுத்தப்படும் என்பது தான். ஆனால், இது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், விரைவாக PF கணக்கில் உள்ள ஊழியர்களின் தொகை வட்டியாக மாறி பிஎஃப் அக்கவுண்டில் சேர்க்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்