Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ECIL Recruitment 2022: நீங்க 10 ஆவது பாஸா…? அருமையான சம்பளத்தில் வேலை ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.

Gowthami Subramani June 06, 2022 & 10:20 [IST]
ECIL Recruitment 2022: நீங்க 10 ஆவது பாஸா…? அருமையான சம்பளத்தில் வேலை ரெடியா இருக்கு…. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க.Representative Image.

ECIL Recruitment 2022: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்த ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, ஊதியத் தொகை மற்றும் இன்னும் சில விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் (ECIL Recruitment 2022).

முக்கிய விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்

பணியின் பெயர்

TRADESMAN-B [WG-III], LVD(WG-II) மற்றும் LDC

காலிப்பணியிடங்கள்

55

விண்ணப்பிப்பம் தொடங்கப்பட்ட நாள்

ஜூன் 04, 2022

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி

ஜூன் 25, 2022

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

பணி நிலை

அறிவிப்பு வெளியானது

 

பணி விவரம்

கீழ்க்காணும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன (ECIL Job Vacancies).

துறை

காலிப்பணியிடங்கள்

TRADESMAN-B [WG-III]

40

LVD(WG-II)

4

LDC

11

மொத்தம்

55

 

ஊதியத்தொகை

இதில் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, அந்தந்த துறைகளில் வழங்கப்படும் ஊதிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (ECIL Job Recruitment).

துறை

ஊதியத்தொகை / மாதம்

TRADESMAN-B [WG-III] மற்றும் LDC (WG-II)

3 சதவீத வருடாந்திர அதிகரிப்புடன் ரூ. 20,480 மாத ஊதியமாக வழங்கப்படுகிறது

LVD (WG-II)

3 சதவீத வருடாந்திர அதிகரிப்புடன் மாத ஊதியமாக ரூ. 18,500 வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி

இதில் கலந்து கொள்ள நினைப்பவர்கள், கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (ECIL Job Recruitment 2022).

NAC அல்லது மெட்ரிகுலேஷன்/SSC உடன் மெட்ரிகுலேஷன்/SSC அல்லது அதற்கு இணையான ஐடிஐ சான்றிதழ் (NTC) அல்லது அதற்கு சமமான பிளஸ் ITI சான்றிதழ் (NTC) மற்றும் Manufacturing Process-ல் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருப்பவராக இருக்க வேண்டும்.

ITI சான்றிதழ்களை (NTC) மேலே குறிப்பிட்டுள்ள வர்த்தகத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட வயது வரம்பினைப் பெற்றிருக்க வேண்டும் (ECIL Jobs).

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 40 ஆண்டுகள் வரையிலான வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

மேலும், SC / ST / OBC விண்ணப்பதாரர்களுக்கான கூடுதல் தளர்வும் இந்த கணக்கில் அனுமதிக்கப்படும்.

வயது தளர்வுகள் மற்றும் விலக்குகள்

உச்ச வயது வரம்பில், SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் தளர்வும் அளிக்கப்படுகிறது (ECIL Jobs 2022).

மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் ஆகும். இதில், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் 01/01/1980 முதல் 31/12/1989 வரையிலான காலத்தில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள், கீழ்க்கண்ட முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

  • தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு மற்றும் Driving Test செயல்முறையை உள்ளடக்கியிருக்கும். இதில், நேர்காணல் நடத்தப்படக் கூடாது.
  • அனைத்துத் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இருந்தபோதிலும், ஓட்டுநர் தேர்வு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் 1:4 எனும் விகிதத்தில் அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம்

பொது விண்ணப்பதாரர்கள் (UR)/EWS/OBC போன்றோர் விண்ணப்பக்கட்டணமாக ரூ. 500 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள், கீழேக் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம் (ECIL Job Recruitment 2022 Apply Online).

படி 1: விண்ணப்பதாரர்கள் முதலில் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உள்ள அறிவிப்பைத் தேடவும்.

படி 2: ஆன்லைனில், விண்ணப்பப்படிவம் நிரப்புவதற்கு ஜூன் 04 ஆம் தேதி முதல் ஜூன் 25 வரை செயல்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் இந்தக்குறிப்பிடப்பட்ட நேரத்திற்குள் விண்ணப்படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

படி 3: விண்ணப்பதாரர்கள் பதிவு செய்த பிறகு, அதனை பிரிண்ட் அவுட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

படி 4: விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யப்பட்ட விண்ண்பப் படிவத்தின் அச்சுப் படிவத்தில், சமீபத்தில் எடுத்த பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையொப்பமிட வேண்டும். கல்வித் தகுதி, பிறந்த தேதி, அனுபவம், சாதி, மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களைக் கொண்டு வர வேண்டும்.

படி 5: இணைக்கப்பட வேண்டிய புகைப்படம் மற்றும் கையொப்பத்தின் அளவு முறையே 100Kb மற்றும் 50Kb அளவிற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கான அறிவிப்பைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தைப் பயன்படுத்தவும்.

அறிவிப்பு 1

அறிவிப்பு 2

அறிவிப்பு 3

ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யுங்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள், குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்