Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வனத்துறையில் 161 காலியிடங்கள் நிரப்ப ரூ.10 கோடி ஏன் தேவை..? - அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

Chandrasekaran Updated:
வனத்துறையில் 161 காலியிடங்கள் நிரப்ப ரூ.10 கோடி ஏன் தேவை..? - அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி Representative Image.

வனத்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 161 பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ஏன் தேவைப்படுகிறது என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் வனத்துறையில் காலியாக உள்ள ஆயிரத்து 161 பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பணியாளர்கள் தேர்வுக்கு 10 கோடியே 81 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனவும்  அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அரசுத்தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், வனத்தை பாதுகாப்பது மாநில அரசின் கடமை எனவும், காலியிடங்களை நிரப்பாமல் இயற்கையை எப்படி பாதுகாக்கப்படும் எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ரூபாய் ஏன் தேவைப்படுகிறது எனவும், விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படுமே; அந்த தொகை எங்கு செல்கிறது எனவும் ஆயிரத்து 161 பேரை தேர்வு செய்ய 10 கோடியே 81 லட்சம் ரூபாய் என்றால் ஒருவர் தேர்வு செய்ய  93 ஆயிரம் ரூபாய்  செலவு செய்யப்படுகிறதா எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர், வனத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப 10 கோடியே 81 லட்சம் ஏன் செலவாகிறது, தேர்வாணையம் உள்ள போது அரசு ஒப்புதல் ஏன் பெற வேண்டும், காலிப் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும் என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்