Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பட்டப்படிப்புடன் லட்சக்கணக்கு சம்பளத்தில் வேலை..! அரசு அறிவித்த சூப்பர் திட்டம்…!

Gowthami Subramani [IST]
பட்டப்படிப்புடன் லட்சக்கணக்கு சம்பளத்தில் வேலை..! அரசு அறிவித்த சூப்பர் திட்டம்…!Representative Image.

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகமான TAHDCO வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் வேலைவாய்ப்பு பெறும் முறை உள்ளிட்ட விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

தமிழக அரசு ஆதி திராவிடருக்கான ஓர் சிறப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் குறிப்பிட்டது போல, மாணவர்கள் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்கலாம். இந்த சிறப்பான திட்டம் TAHDCO மற்றும் HCL நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இதில் விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பட்டப்படிப்பு படிக்க உறுதுணையாக இருக்கும். மேலும், படிப்பு முடிந்தவுடன் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகை

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடருக்கான இந்த சிறப்பான திட்டத்தின் மூலம், பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டில் மடிக்கணினி, இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இவர்களுக்கு 10,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டாம் ஆண்டில் லட்சக் கணக்கில் சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு HCL நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல், BITS Pilani, SASTRA, மற்றும் Amity உள்ளிட்ட முன்னணி பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு படிப்பதற்கான வசதி ஏற்படுத்தித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://images.news18.com/tamil/uploads/2022/08/bjp-1.jpg

கல்விக்கட்டணம்

இந்த படிப்புக்கான கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகமாகிய தாட்கோ, மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைக் கடனாக வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

திட்டத்தில் தகுதி பெறும் நபர்கள்

மேலும், இந்தத் திட்டத்தில் 2020-21, மற்றும் 2021-22 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களே பங்கேற்க முடியும்.

குறிப்பாக, இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்காக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து விண்ணப்பிக்க நினைப்பவர்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை

தமிழ்நாடு அரசு வழங்கும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் முதலில் TAHDCO-ன் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

அந்தப் பக்கத்தில் Register என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு க்ளிக் செய்த பிறகு, புதிதாக ஒரு பக்கம் தோன்றும்.

அந்தப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்திற்குச் செல்ல இந்த லிங்கைக் க்ளிக் செய்ய வேண்டும்.

மேலே கூறப்பட்ட வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு விண்ணப்பிக்க இந்த லிங்கைக் க்ளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

HCL Job Offer with TAHDCO Loan | TAHDCO Loan Details 2022 | TAHDCO Subsidy Details | SCST Training Programmes 2022 | TAHDCO vehicle Loan Details in Tamil | TAHDCO Loan for SC in Tamil | TAHDCO Housing Loan Details | scst Loan Scheme in Tamil nadu | TAHDCO Benefits | TAHDCO Skill Training | HCL Job Offer with TAHDCO | sc/st Loan Scheme in Tamilnadu |  TAHDCO and HCL Job Offer with study graduate certificate | TAHDCO and HCL Job Offer with study graduate level | TAHDCO and HCL Job Offer with study graduate students | TAHDCO and HCL Job Offer with study graduate engineer Train


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்