Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

என் மகனை காப்பாத்துங்க; மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை! 

KANIMOZHI Updated:
என் மகனை காப்பாத்துங்க; மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்காக பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை! Representative Image.

மர்மநோயால் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் தமிழக அரசும் முதல்வரும் உதவி செய்து சிறுவனை காப்பாற்ற வேண்டும் என பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாறைப்பட்டி கிராமம் தோட்டத்து குடியிருப்பில் வசித்து வரும் மாரிமுத்து-கஸ்தூரி தம்பதிக்கு முகேஷ் என்ற 10 வயது மகன் உள்ளார். அங்குள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் முகேஷுக்கு, கடந்த சில மாதங்களாகவே உடல் நல பாதிப்பு இருந்துள்ளது. ஒருநாள் சிறுவன் வயிற்று வலியால் துடிதுடித்த சிறுவன், மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து பழனி மற்றும் திண்டுக்கல் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனக்கூறப்படுகிறது. 

மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். வீட்டில் இருந்த ஆடு, மாடு, கோழி என தங்களது வாழ்வாதரத்திற்காக வளர்ந்து வந்த அனைத்து விலங்குகளையும் விற்று, சுமார் 7 லட்சம் வரை மகனின் சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர். அப்போது தான் சிறுவனுக்கு “வில்சன் காப்பர்” என்ற மர்ம நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிய இந்த அரியவகை நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை கிசிச்சை செய்ய வேண்டும், இல்லை என்றால் சிறுவனை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அத்தோடு சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனை எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர். 

சிறுவனை புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரைத் தாக்கியுள்ள மர்ம நோய்க்கான சிகிச்சை இங்கு இல்லை எனக்கூறி கைவிரித்துள்ளனர். தற்போது ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி, இறங்கி செய்வதறியாது தவித்து வரும் பெற்றோர், தங்களது மகனைக் காப்பாற்றிக் கொடுக்கும் தமிழக அரசுகும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்