Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழனிக்கு நடைபாதை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... விபத்தை தடுக்க பலே ஏற்பாடு! 

KANIMOZHI Updated:
பழனிக்கு நடைபாதை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு... விபத்தை தடுக்க பலே ஏற்பாடு! Representative Image.

உசிலம்பட்டி வழியாக பழனி முருகன் கோவில் மற்றும் சபரிமலைக்கு  பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இரவினில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி  போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழியாக பழனிமலைக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் என தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் பாதையாத்திரையாக சென்று வருகின்றனர்.,

இந்நிலையில் பாதையாத்திரையாக செல்லும் பக்தர்கள் நலன் கருதி அவர்களை விபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் உசிலம்பட்டி போக்குவரத்து காவலர்கள் சார்பில் பாதையாத்திரை பக்தர்கள் கொண்டு வரும் பைகள் மற்றும் பொருட்களில் வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்தில் இரவினில் ஒளிறும் ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,

தொடர்ந்து பாதையாத்திரை செல்லும் பக்தர்கள் இரவு 7 மணிக்கு மேல் அதிகாலை 6 வரை சாலைகளில் நடந்து செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பான இடங்களில் தங்கி இருந்து பகல் நேரங்களில் நடந்து செல்ல அறிவுரை வழங்கி போக்குவரத்து காவலர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்