Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

வேடந்தாங்கல் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு

Saraswathi Updated:
வேடந்தாங்கல் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு  Representative Image.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் ஊராட்சியில் வலையபுத்தூரில் ஏரியில் இருந்து வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக வரத்துகால்வாயினை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகளை  மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

வேடந்தாங்கல் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு  Representative Image

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பார்வையாளர்கள் குறைவாக காணப்படுவதால் அதனை மேலும் அழகுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளவும்பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இருக்கை வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் அப்போது கூறினார். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வரும் பொது மக்களுக்கு பஞ்சாயத்து மூலம் ஆங்காங்கே தண்ணீர் வசதி ஏற்பாடு செய்துதருமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

வேடந்தாங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு  பஸ் ஸ்டாண்ட், நிழற்குடை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும் வனத்துறை சார்பாக பறவைகள் சரணாலயம் பற்றி தெரிந்து கொள்வதற்காக நெடுஞ்சாலை ஓரங்களில் பறவைகளின் பெயர்கள் படத்துடன்  கூடிய தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும் மகளிர் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் டி-ஷர்ட் ,கேப் போன்ற பொருட்களை கடைகளில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

வேடந்தாங்கல் சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் - செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவு  Representative Image

பறவைகள் சரணாலயத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு ஊராட்சிகளின் மூலம் தூய்மைப்படுத்தும் பணிகளை செய்ய வேண்டும். மேலும் நெடுஞ்சாலை துறை மூலம் பறவைகள் சரணாலயத்திற்குள் இருக்கும் காலியான இடங்களில் மரங்களை நட ஏற்பாடு செய்ய வேண்டும் வேடந்தாங்கல் ஏரியில் உள்ள இரண்டு மதகுகளில் ஷட்டர் போட வேண்டும் அதன் பிறகு தான் வயலூர் ஏரியிலிருந்து வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வசதி கொண்டு வர முடியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான மகாபலிபுரம், முட்டுக்காடு, வண்டலூர் உயிரியல் பூங்கா மாதிரி வேடந்தாங்கல் பறவைகள் சரணாலத்தையும் சுற்றுலாத்தலமாக மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல்மருவத்தூர் கோவிலுக்கு வரும் பொதுமக்களை கவரும் வண்ணம் நெடுஞ்சாலைகளில் விளம்பரப் பலகைகள் வைக்க வேண்டும். திருக்கழுக்குன்றம் வழியாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வர ஏதுவாக கிலோமீட்டர் உடன் கூடிய வழிகாட்டிப் பலகை வைக்க வேண்டும். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வரும் மக்கள் பைனாகுலர் மூலமாக பறவைகளை பார்க்க வனத்துறை ஏற்பாடு செய்து தர வேண்டும் வேடந்தாங்கல் ஏரிகளில் உள்ள பழைய மீன்களை மீன்களை அகற்றிவிட்டு புது மீன்களை விட மீன்வளத் துறை மூலமாக ஏற்பாடு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  வேடந்தாங்கல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்த ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறை மூலமாக ஏற்பாடு செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த ஆய்வின்போது  செங்கல்பட்டு சார்ஆட்சியர் லட்சுமிபதி, வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலா, வன உயிரின காப்பாளர்  பிரசாந்த், வேடந்தாங்கல் ஊராட்சி தலைவர் வேதாச்சலம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்