Fri ,Apr 26, 2024

சென்செக்ஸ் 74,056.07
-283.37sensex(-0.38%)
நிஃப்டி22,487.10
-83.25sensex(-0.37%)
USD
81.57
Exclusive

ரூ.3,000-யில் இருந்து 5000 ஆக அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கவலை! 

KANIMOZHI Updated:
ரூ.3,000-யில் இருந்து 5000 ஆக அதிகரிப்பு; இல்லத்தரசிகள் கவலை! Representative Image.

பனிப்பொழிவு, முகூர்த்த நாட்கள் காரணமாக திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 9 டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருவதால், ஒரு கிலோ மல்லிகை பூ  5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயகன்பட்டி, கள்ளிப்பட்டி, கலிக்கம்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி, சிலுவத்தூர், அதிகாரிப்பட்டி உட்பட பல ஊர்களில் விவசாயிகள் விளைவிக்க கூடிய பூக்களை திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு  கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம். 
இங்கிருந்து தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா பாண்டிச்சேரி போன்ற வெளி மாநிலங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்வார்கள் இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தது இதன் காரணமாக பூக்களின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டது இந்நிலையில் தற்பொழுது பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் பூ விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே நாளை  முகூர்த்த நாள் என்பதால்  பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.  திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு  சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 டன் பூக்கள் வரை விற்பனைக்கு வரும் ஆனால் இன்று 03.12.22 திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு 15 டன் அளவில் மட்டுமே பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. 

இதனால் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தலைக்கு சூடிக்கொள்ளக்கூடிய பூக்களின் விலைகள் அதிரடியாக உயர்ந்துள்ளது கடந்த 15 தினங்களுக்கு முன்பு  ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ 600 முதல் 700 வரை விற்பனை ஆனது ஆனால் தற்பொழுது மல்லிகைபூ வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ ரூ 5,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதே மல்லிகை பூ கிலோ 3,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதே போல் கனகாம்பரம் 1,500 ரூபாய்க்கு,  முல்லைப்பூ 1,400 ரூபாய்க்கும், ஜாதி மல்லி 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்