Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா - தேரைச் சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்!

Saraswathi Updated:
நெல்லையப்பர் கோயில் ஆனித்திருவிழா - தேரைச் சுத்தம் செய்த தீயணைப்பு வீரர்கள்!Representative Image.

திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழாவையொட்டி, திருத்தேர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று திருநெல்வேலி நகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோவில்.  இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் ஆனி பெருந்திருவிழாவின் 9வது நாளில் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் ஓடும் நிகழ்ச்சி நடத்தப்படும்.  அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆனி பெருந்திருவிழா வரும் 24ம் தேதி தொடங்கவுள்ளது. இதையொட்டி, நெல்லையப்பர் திருக்கோவிலின் தேர் சுத்தம் செய்யும் பணி தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது.

தீயணைப்பு துறை வாகனம் மூலம் தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டு பிரம்மாண்ட தேரானது சுத்தம் செய்யப்பட்டது. விநாயகர், சுப்ரமணியர் சுவாமி, நெல்லையப்பர், காந்திமதியம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் உட்பட ஐந்து தேர்களையும் தீயணைப்பு துறையினர் சுத்தம் செய்தனர்.  இதனை தொடர்ந்து,  வரும் 24 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு சுவாமி தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டு தேரோட்ட பணிகள் தொடங்கவுள்ன. தேர் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதையொட்டி, நெல்லையப்பர் திருக்கோவில் ரத வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்