Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்..! - எஸ்டிபிஐ வலியுறுத்தல்!

Chandrasekaran Updated:
திருநெல்வேலியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்..! - எஸ்டிபிஐ வலியுறுத்தல்!Representative Image.

திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் பகுதி, வார்டு நிர்வாகிகள்  கூட்டம் மாவட்ட பொதுச் செயலாளர் கனி தலைமையில் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது . மாவட்ட செயலாளர் அன்வர்ஷா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் ரஹ்மதுல்லா, சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் முபாரக் அலி கலந்து கொண்டனர்.

பாளை,நெல்லை, தச்சை, மேலப்பாளையம், சுத்தமல்லி, மானூர் பகுதி தலைவர் மற்றும் செயலாளர்கள் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி குறித்து திட்டமிடல் நடைபெற்றது. கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மொத்த அணைகளில் 10.42% மட்டுமே நீர் இருப்பு உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 1097 குளங்களில் 57 குளங்களில் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதுவும் ஒரு மாதத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் 

மேலப்பாளையம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்காலிக பேறுகால வார்டு அமைக்க வேண்டும். பழைய பேருந்து நிலையம் அருகில் புழுதி பறப்பதை தடுக்கும் வகையில் தற்காலிக சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் அசனார்,சிந்தா, ஜெய்லானி, நிஜாம்தீன், வதூத்,கசாலி,சிராஜ், யூசுப் பாஷா, ஹக்கி மூசா காஜா, பீர், ஷாஜஹான், பக்கீர், யாசர், கலந்து கொண்டனர் நிறைவாக பாளை தொகுதி தலைவர் சலீம்தீன் நன்றி கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்