Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மோசடி வழக்கு 6 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை..!

madhankumar April 28, 2022 & 12:45 [IST]
 மோசடி வழக்கு 6 பேருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை..!Representative Image.

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியை சேர்ந்த கூட்டுறவு சங்கத்தில் மோசடியில் ஈடுபட்ட 6 நபர்களுக்கு தலா 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி நெல்லை கோர்ட் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கு:

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2000 முதல் 2003-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உழவர் கடன் அட்டை திட்ட காசுக்கடனில் பொய்யான நில உடைமை, அடங்கல் போலி வவுச்சர் தயாரித்தும், கடன்தாரர்களை ஏமாற்றி ஆவணத்தில் கையொப்பம் பெற்று கடன் வழங்கியது போன்று மோசடி செய்தும், போலி பத்திரங்களில் போலியாக கையெழுத்து தயார் செய்தும் ரூ.28 லட்சத்து 43 ஆயிரத்து 45 கையாடல் செய்யப்பட்டு உள்ளது தெரிய வந்தது.


இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய காலகட்டத்தில் துணை பதிவாளராக இருந்த ஜோசையா என்பவர் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சங்க நிர்வாகத்தில் இருந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை:

இந்த வழக்கானது நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்துவந்தது. நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வந்த நிலையில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். ஒருவர் தலைமறைவாக உள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கடற்கரை செல்வன், அப்போதைய வங்கி செயலாளர் நல்லசிவம், நிர்வாக குழு உறுப்பினர் லட்சுமணன், சரக மேற்பார்வையாளர்கள் நாராயணன், ஆறுமுகநயினார், வெங்கடேசன், உறுப்பினர் தேவராஜ் சாமுவேல் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், 6 பேருக்கும் மொத்தம் ரூ.37 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜூடித் ஆஞ்சலோ ஆஜரானார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்