Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,748.42
0.00sensex(0.00%)
நிஃப்டி22,055.70
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிரும் கோவை.. பதற்றத்தில் மக்கள்!!

Sekar September 23, 2022 & 16:19 [IST]
அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிரும் கோவை.. பதற்றத்தில் மக்கள்!!Representative Image.

கோவை மாவட்டத்தில் பாஜக அலுவலகம் மற்றும் பாஜகவினருக்கு சொந்தமான இடங்கள் பலவற்றில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. 

நேற்று தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் பிஎப்ஐ அமைப்புக்கு எதிராக என்ஐஏ, அமலாக்கத்துறை மிகப்பெரிய அளவில் சோதனை நடத்தியதோடு நூற்றுக்கும் மேற்பட்ட பிஎப்ஐ உறுப்பினர்களை கைது செய்தது. 

இதனால் நேற்று பல இடங்களிலும் பிஎப்ஐ அமைப்பினர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று கூட கேரளாவில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த பிஎப்ஐ வன்முறையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளன.

இதற்கிடையே நேற்று இரவு பாஜக அலுவலகத்தில் மர்மம் நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். மேலும் கோவை பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு சொந்தமான கடைகளில் ஒரே நேரத்தில் பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது.

கோவை சித்தாபுதூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு மாநகர பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. இந்த பெட்ரோல் குண்டை வீசியது யார் என விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில், குண்டை வீசியவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி உள்ளன. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்தான் வேறு சில இடங்களிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளது பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பாஜகவைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மாருதி என்ற துணிக்கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.

அதே போல், இன்று காலை 100 அடி சாலையில் உள்ள வெல்டிங் கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இந்த கடை ரத்தினபுரி பாஜக மண்டலத் தலைவர் மோகன் என்பருக்கு சொந்தமான கடை என்று கூறப்படுகிறது. இது போக இந்து முன்னணியை சேர்ந்த சரவணகுமார் என்பவரின் ஆட்டோவும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது. 

மேலும் மேட்டுப்பாளையத்தில் பிளைவுட் கடை ஒன்றின் மீதும் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த கார் ஒன்று சேதமடைந்துள்ளது. அதே போல் ஈரோட்டிலும் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கடை ஒன்றில் டீசல் குண்டு வீசப்பட்டுள்ளது.

இது தவிர பொள்ளாச்சி அடுத்த குமரன் நகர் பகுதியில் பாஜக நிர்வாகிக்கு சொந்தமான வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதில் பெரும்பாலான குண்டுகள் சரியாக வெடிக்காததால் உயிர் சேதங்கள் மற்றும் பொருட் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. 

எனினும் அடுத்தடுத்து பாஜகவினரை குறிவைத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குண்டு வீச்சு சம்பவங்கள் கோவையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

இதையடுத்து 600 போலீசார் களமிறக்கப்பட்டு ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க கோவை, ஈரோடு மற்றும் சேலத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை