Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டீ-புரோமோசனால் விரக்தி - கன்னியாகுமரியில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி

Saraswathi Updated:
டீ-புரோமோசனால் விரக்தி - கன்னியாகுமரியில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி Representative Image.

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் 8 வகுப்பிலிருந்து மீண்டும் 7ஆம் வகுப்பிற்கு தகுதி இறக்கம் செய்யப்பட்டதால் மனமுடைந்த மாணவி, தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியை சார்ந்தவர் கூலி தொழிலாளி லக்ஷ்மணபெருமாள்.  இவருக்கு இரண்டு மகள்கள். இருவரும் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவருகின்றனர்.  இவர்களில், 2வது மகள் சிவப்பிரியா 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி சிவப்பிரியாவை தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் வகுப்பு ஆசிரியர். ஏழாம் வகுப்புக்கு அனுப்பி உள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. மாணவியும் பெற்றோரிடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.  

உடன்படித்த மாணவிகளின் கேலி கிண்டலால் கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்ட சிவப்பிரியா நேற்று இரவு வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உறங்கியுள்ளார். காலை பள்ளிக்கு அவரது தாய் எழுப்பியபோது மாணவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, உறவினர்கள் அந்த மாணவியை மீட்டு கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி போலீசார், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பள்ளி மாணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்