Sun ,May 19, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

ஓசி காரில் கெத்தாக சுற்றிய டிடிஎஃப் வாசன்; கொத்தாய் தூக்கி பைன் போட்ட போலீஸ்!!

KANIMOZHI Updated:
ஓசி காரில் கெத்தாக சுற்றிய டிடிஎஃப் வாசன்; கொத்தாய் தூக்கி பைன் போட்ட போலீஸ்!!Representative Image.

சென்னையில் படம் பார்க்க நம்பர் பிளேட் இல்லாமல்  காரை ஓட்டி வந்த டி.டி.எப் வாசன். வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்.

எம். பி என்டர்டெயின்மென்ட் - சரத் மற்றும் பிரவீன் தயாரிப்பில் இயக்குநர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ் நடிக்கும் படம் காலேஜ் ரோடு. காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி  சென்னை வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை காண்பதற்காக நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூப் புகழ் டிடிஎப். வாசன் ஆகியோர் படத்தை  காண்பதற்காக திரையரங்கிற்கு வந்தனர். 

டி.டி.எப் வாசனுக்கென்று அதிகளவு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் டி.டி.எப் வாசன் வந்து இறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையானது. இது குறித்து தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார், நம்பர் பிளேட் இல்லாமல் டி.டி.எப் வாசன் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது, நம்பர் பிளேட் இல்லாமல் டி.டி.எப் வாசன் ஓட்டி வந்த கார், அவரது நண்பர் பிரவீனுக்கு சொந்தமான கார் எனவும் கர்நாடக மாநிலத்தில் கார் வாகன பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் for registration என காரில் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அது உடைந்துவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே போக்குவரத்து விதிமீறல்,அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கி வரும் டி.டி.எப் வாசன் மேலும் ஒரு தலைவலியாக இது அமைந்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்