Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Airtel 5G Launch Date in India: இனி ஏர்டெல்-ல 5ஜி மட்டும் தான்...பாத்துக்கோங்க அப்புறம் உங்க இஷ்டம்! ஆனா அது யாருக்கு?

Priyanka Hochumin August 05, 2022 & 18:30 [IST]
Airtel 5G Launch Date in India: இனி ஏர்டெல்-ல 5ஜி மட்டும் தான்...பாத்துக்கோங்க அப்புறம் உங்க இஷ்டம்! ஆனா அது யாருக்கு?Representative Image.

Airtel 5G Launch Date in India: மக்களே விஷயம் தெரியுமா? தகவல் தொடர்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனங்களான எரிக்சன், நோக்கியா, சாம்சங் ஆகியவற்றுடன் பார்தி ஏர்டெல் கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த தகவல் அனைவருக்கு ஒரு புரியாத புதிராக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. காரணம் இது தானா?

சமீபத்தில் நடைபெற்ற 5ஜி அலைக்கற்றை ஏலம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதில் இந்தியாவின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. அதில் சுனில் மிட்டல் தலைமையிலான பார்தி ஏர்டெல் 900 MHz, 1800 MHz, 2100 MHz, 3300 MHz, 26 GHz அலைக்கற்றைகளில் 19,867.8 MHz அலைவரிசையை தங்கள் வசம் ஒதுக்கியுள்ளது. இதற்காக நிறுவனம் ரூ.43,084 கோடி செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அது சரி எதுக்கு ஒப்பந்தம் போட்டாங்க!

ஏர்டெல் நிறுவனத்தின் கூற்று படி, வாடிக்கையாளர்களுக்கு எந்த வித தடங்கலும் இன்றி 5ஜி சேவையை விரைந்து வழங்கவே இந்த ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தியாவில் ஏர்டெலின் நிர்வகிக்கப்படும் சேவைகளை (managed services) விரிவுபடுத்தவே எரிக்சன், நோக்கியா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் என்று சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.     

ஆகஸ்ட் முதல் 5ஜி சேவை ஆரம்பம்

இனி இந்தியா முழுவதும் 5ஜி என்ற நிலைமையை ஆதரிக்கும் விதமாக "ஆகஸ்ட் மாதம் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் தொடங்கவுள்ளதாக" ஏர்டெல் தலைமை செயல் அலுவலர் கோபால் விட்டல் கூறினார். மேலும் நெட்வொர்க் ஒப்பந்தங்கள் முடிவடைந்துவிட்டதால், ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு 5G இணைப்பின் முழுப் பலன்களை வழங்க உலகெங்கிலும் உள்ள சிறந்த தொழில்நுட்பக் கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படும் எனவும் கூறினார். தொலைத்தொடர்பு துறையால் இந்தியா டிஜிட்டல் பொருளாதாரமாக மாற வழிநடத்தப்படும் மற்றும் 5G சேவைகள் இந்தியாவின் தொழில்கள் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவரும் எனவும் விட்டல் கூறியுள்ளார்.

இந்த நகரங்களுக்கு தான் முதல்ல 5ஜி

இந்தியாவின் மிக முக்கியமான 13 நகரங்களில் இந்த 5ஜி சேவை கொண்டு வருவதாக தொழில்தொடர்பு துறையினர் குறிப்பிட்டுள்ளனர். அவற்றுள் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகியவை அடங்கும். 

Airtel 5G Launch Date in India, Airtel 5G Launch Date in India 2022, Airtel 5G Launch Date in India in Chennai, Airtel 5G Launch Date in India in tamilnadu, Airtel 5G Launch Date in India in bihar, Airtel 5G Launch Date in India in pune, Airtel 5G Launch Date in India in Kolkata, Airtel 5G Launch Date in India in bangalore, Airtel 5G Launch Date in India price, Airtel 5G Launch, Airtel 5G plans, Airtel 5G sim, Airtel 5G bands in india, airtel 5g auction deal, airtel 5g speed,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்