Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Erase Personal Information from Google in Tamil: நீங்க டைப் செய்யும் போது Google இதெல்லாம் சேகரிக்கிறது தெரியுமா?

Priyanka Hochumin August 05, 2022 & 14:15 [IST]
How to Erase Personal Information from Google in Tamil: நீங்க டைப் செய்யும் போது Google இதெல்லாம் சேகரிக்கிறது தெரியுமா?Representative Image.

How to Erase Personal Information from Google in Tamil: நீங்கள் எப்பையாவது உணர்ந்து இருக்குறீர்களா? நாம் கூகுள் சர்ச் இல் டைப் செய்வது வெறும் வார்த்தைகள் அல்ல, நம்முடைய மொத்த ஜாதகமும் தான். ஏனெனில் நாம் டைப் செய்வதை வைத்து தான் கூகுள் நம்மை கண்டறிகிறது. அது எப்படி, இதனால் நமக்கு ஏதேனும் தீங்கா என்பதை முழுமையாக பார்ப்போம்.

Google இல்லாமல் இப்ப வாழ்க்கையே இல்ல

இப்ப இது தான் நிலைமை, ஏனெனில் நமக்கு ஏதாவது தெரிஞ்சிக்க வேண்டும் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கூகுள் தான். அது மட்டும் இன்றி வழி காட்டுவது முதல் உணவு வீட்டுக்கு வருவது வரை அனைத்தும் கூகுளினால் சாத்தியம். அப்படி பட்ட கூகுள் நம்மளைப் பற்றிய நிறைய தகவல்களை சேகரித்து வைக்கிறது தெரியுமா? அது என்னென்ன தகவல், அது எப்படி சேகரிக்க படுகிறது என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

டைப் பண்றதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

நாம் கூகுளை பயன்படுத்தி ஒன்றை தேடும் பொழுது கூகுள் சர்ச் பாக்ஸ் இல் டைப் செய்து தான் தேடுவோம். நமக்கு வெறும் டைப் செய்றது மட்டும் தான் தெரியும். ஆனால் அதுக்கு பின்னாடி நடக்குறது பல பேருக்கு தெரியாது. நாம் டைப் செய்வதால் கூகுள் சேகரிக்கும் தகவல்கள் இவை தான்.

  • முதலில் என்ன அடிக்கடி தேடுகிறீர்கள்
  • எந்தெந்த இணையதளங்களை பார்வையிடுகிறீர்கள்
  • என்ன வீடியோ பார்த்தீர்கள்
  • வெப்சைட் இல் இருக்கும் எந்த விளம்பரத்தை பார்த்தீர்கள் அல்லது கிளிக் செய்தீர்கள்
  • நீங்கள் தற்போது இருக்கும் இருப்பிடம்
  • உங்களின் சாதனம் பற்றிய தகவல்
  • IP முகவரி மற்றும் குக்கீ தரவு ஆகியவையாகும்.

எதுக்கு இப்படி பண்றாங்க?

இது முற்றிலும் கூகுள் உங்களை கண்டறிய உதவும் வழிகளாகும். ஏன் என்றால் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கான மக்கள் உலகம் முழுவதும் கூகுளை பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்கையில் உங்களுக்கு என்ன தேவையோ அதை உங்களுக்கு வழங்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் கூகுள் இதனை சேகரிக்கிறது. உங்களை அடையாளம் காணும் வகையில் இருக்கும் இந்த தகவல்களை குக்கீயில் சேமிக்கப்படும். பின்பு Google இன் டேட்டா சென்டரில் சேமிக்கப்பட்டுள்ள உங்களின் சுயவிவரத்துடன் இணைக்கப்படும். இதனின் அடிப்படையில் விளம்பரக் குறியீடுகள் கண்டறிந்து உங்களுக்கான விளம்பரங்கள் ஒளிபரப்பாகிறது.

வேணாம்னா நீக்கிடுங்க...

இப்படி உங்களுடைய தகவல்கள் சேகரிப்பது பிடிக்கவில்லை என்றால் அதை நீங்கள் தாராளமாக நீக்கிவிடலாம். அதற்கான வழிமுறைகள்,

கூகுள் சர்ச் இல் Removal page-ல் (https://support.google.com/websearch/answer/9673730) requirements சரிபார்க்கவும்.

ஒன்றுக்கு இருமுறை தேவையான தகவல்களை சரிபார்த்த பிறகு delete probes-ஐ தொடங்கலாம்.

இப்படியாக அனைத்து வழிமுறைகளும் முடிந்த பிறகு, உங்கள் இமெயில் மூலம் கன்பர்மேசன் கேட்கப்படும். அதனை நீங்கள் சரியாக செய்யும்பட்சத்தில் உங்கள் கோரிக்கை ஏற்று, தனிப்பட்ட தகவல்கள் நீக்கப்படும். 

How to Erase Personal Information from Google in Tamil, how to delete your data from google, how to remove personal information off of google, can you remove personal information from google, how do I remove my personal information from google for free, google collecting personal data, google collect personal information, things google collecting personal data, what data does google collect, Google.

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்