Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Apple Watch Series 8 Price in India: உங்களுக்கு காய்ச்சல் இருக்கான்னு...இதுவே காண்பிக்கும்! இன்னும் என்னெல்லாம் இருக்கோ?

Priyanka Hochumin July 04, 2022 & 19:15 [IST]
Apple Watch Series 8 Price in India: உங்களுக்கு காய்ச்சல் இருக்கான்னு...இதுவே காண்பிக்கும்! இன்னும் என்னெல்லாம் இருக்கோ?Representative Image.

Apple Watch Series 8 Price in India: ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தும் பயனர்களுக்கு இது ஒரு சர்பிரைஸ் தான். இதுவரை உங்களின் இதய துடிப்பு, விளையாட்டு போன்றவற்றை கண்காணித்து வரும் ஸ்மார்ட் வாட்ச்கள் இப்பொழுது உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என்பதையும் சுட்டிக் காட்டப்போகிறது. வாருங்கள் இதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்வோம்.

காய்ச்சல் இருக்கான்னு செக் பண்ண சென்சார்

நாம் இதுவரை பார்த்த ஸ்மார்ட் வாட்ச்களில் பயனர்களின் இதய துடிப்பு, ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, உடற் பயிற்சி ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டது. ஆனால் கூடிய விரைவில் வரப்போகும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறியும் திறன் கொண்ட உடல் வெப்பநிலை சென்சார் (body temperature sensor) இதில் இடம்பெற்றுள்ளது. பிறகு அது உங்களை மருத்துவரிடம் பேசவும் அல்லது பிரத்யேக வெப்பமானியைப் (thermometer) பயன்படுத்தவும் பரிந்துரைக்கலாம். கூடுதலாக, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8ல் ஒன்றுக்கு பதிலாக இரண்டு ஸ்பீக்கர் கிரில்ஸ் இருக்கலாம்.

ஒரு ரிப்போர்ட்டர் என்ன சொல்லிருக்காரு தெரியுமா?

ப்ளூம்பெர்க்கின் தொழில்நுட்ப நிருபர் மார்க் குர்மனின் சமீபத்திய அறிக்கை படி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை கண்டறியும் திறனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். மேலும் வரவிருக்கும் ஸ்மார்ட் வாட்சில் புதிய ஹெல்த் டிராக்கிங் அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கலாம். அந்த சென்சார் எப்படி செயல்படும் என்றால், நம்முடைய நெற்றி அல்லது மணிக்கட்டு வெப்பமானியைப் போன்ற ஒரு குறிப்பிட்ட ரீடிங்கை நமக்குத் தராது. நீங்கள் அணியும் அந்த வாட்ச் உங்களுக்கு காய்ச்சல் இருக்கு என்று நம்பினால் மட்டுமே உங்களை அலெர்ட் செய்யும் என்கிறார் குர்மன்.

Also Read | Moto G42 Price in India இப்படி ஒரு பட்ஜெட் ப்ரெண்ட்லியான ஸ்மார்ட்போனா...எங்க கிடைக்கும்னு தெரிஞ்சிக்கோங்க!

முன்பே கணித்தவர்

இப்படி ஒரு அம்சத்துடன் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் வரப்போகிறது என்ற பேச்சு சமீப காலமாகத் தான் இருக்கிறது. ஆனால் மே மாதத்தில், TF செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி குவோ, ஸ்மார்ட்வாட்ச்சில் வெப்பநிலை உணர்திறன் அம்சத்தை ஆதரிக்க ஆப்பிள் ஒரு அல்காரிதத்தில் செயல்படக்கூடும் என்று கூறினார். இப்பொழுது இந்த தகவல் பரவலாக பேசுவதைப் பார்த்தல், அவர் சரியாகத் தான் கூறியிருக்கிறார் என்று பலரும் நம்புகின்றனர்.

இத்தனை வேரியண்ட்ல வருதா?

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 சுமார் மூன்று வேரியண்ட்களில் அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவை ஒரு லோ-எண்டு SE, ஒரு ஸ்டாண்டர்ட் சீரிஸ் 8 மற்றும் தீவிர விளையாட்டுகளை இலக்காகக் கொண்ட ஒரு முரட்டுத்தனமான எடிஷனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படைப்பு S7 ஐப் போன்ற விவரக்குறிப்புகளைக் கொண்ட S8 சிப்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த நியூஸ் என்னென்னா 2023 ஆம் ஆண்டிற்கான ஆப்பிள் வாட்ச் மாடல்கள், சீரிஸ் 9 இன் ஒரு பகுதி புதிய செயலியைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Apple Watch Series 8 Price in India, apple watch series 8 release date, apple watch series 8 leaks, apple watch series 8 rumors, apple watch series 8 design, apple watch series 8 launch date in india, apple watch series 8 release date in india, apple watch series 8 specs, apple watch series 8 sensors, apple watch series 8 sleep tracking, apple watch series 8 straps, apple watch series 8 swimming, apple watch series 8 sizes,

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்