Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

iQoo Neo 7 SE நாளைக்கு அறிமுகம்...திடீர் மாற்றத்தால் ஏமாற்றம்...வெளிவந்த செம்ம அப்டேட்!

Priyanka Hochumin Updated:
iQoo Neo 7 SE நாளைக்கு அறிமுகம்...திடீர் மாற்றத்தால் ஏமாற்றம்...வெளிவந்த செம்ம அப்டேட்!Representative Image.

சீனாவில் நாளை டிசம்பர் 2 ஆம் தேதி 12 மணிக்கு iQoo Neo 7 SE ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருந்தது. ஆனால் இப்போது திடீரென அறிமுக நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்து எப்போது இந்த போன் வெளியாகும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த மாடல் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றிய பல தகவல்கள் லீக் ஆகியுள்ளது.

iQoo Neo 7 SE மொத்தம் மூன்று நிறத்தில் வெளியாகும் - எலக்ட்ரிக் ப்ளூ, கேலக்சி மற்றும் இன்டெர் ஸ்டெல்லர் பிளாக் ஆகிய நிறத்தில் கிடைக்கும். மேலும் போனின் முன்பக்கத்தில் ஹோல்-பஞ்ச் கட் அவுட் மற்றும் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பும் உள்ளதாம். அதே போல் நீண்ட நேரம் பயன்பாட்டிற்கு 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. கேமரா தொகுதியில் "Neo OIS AI கேமரா" கல்வெட்டு உள்ளது. கூடுதலாக, பவர் பட்டன் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் கைபேசியின் இடது முதுகெலும்பில் காணப்படுகின்றன.

இன்னும் கூடுதல் தகவல் என்னவென்றால், iQoo Neo 7 SE ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் full-HD+ AMOLED டிஸ்பிளே மற்றும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது. octa-core MediaTek Dimensity 8200 SoC மூலம் இயக்கப்படுகிறது. ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் டூயல் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார்களும் உள்ளது. அதே போல் செல்பீ கேமரா 16 மெகாபிக்சல் கொண்டு வந்துள்ளது.    


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்