Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு...என்னென்ன புது கேஜெட்ஸ் வரப்போகுது தெரியுமா? | Apple WWDC 2023 Event

Priyanka Hochumin Updated:
ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு...என்னென்ன புது கேஜெட்ஸ் வரப்போகுது தெரியுமா? | Apple WWDC 2023 EventRepresentative Image.

வரும் ஜூன் 5 ஆம் தேதி ஆப்பிளின் வருடாந்திர டெவலப்பர் உச்சிமாநாடு - உலகளாவிய டெவலப்பர் மாநாடு (WWDC) 2023 நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் 'பல' மேக் கேஜெட்டுகளை கொண்டு வரலாம் என்று ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த மாநாட்டில் ரியாலிட்டி ஹெட்செட், புதிய iOS மற்றும் பல Mac லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட மூன்று முக்கிய சாதனங்களின் மீது கவனம் செலுத்தலாம் என்று குர்மன் ட்வீட் செய்துள்ளார். மேலும் WWDC 2023 நிகழ்வானது ‘ஆப்பிளின் மிக நீண்ட மற்றும் இரண்டு மணிநேரங்களுக்கு மேல் இருக்கும்' என்றும் கூறப்படுகிறது.

Mac-ஐ தவிர இந்த ஆண்டு WWDC 2023 நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் குறிப்பிடத்தக்கது. ‘ரியாலிட்டி ப்ரோ’ என்று அழைக்கப்படும் இந்த சாதனம் ஆப்பிள் நிறுவனத்தின் எம்2 சிப்செட் போன்ற செயலியுடன் கூடிய சிப்செட் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது.முகபாவனைகள் மற்றும் உடல் அசைவுகளைக் கண்டறியவும் பல கேமராக்களை கொண்டு இருக்கலாம்.

மேலும் ஆப்பிளின் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) ஹெட்செட் 4,000 பிபிஐ இன்டெக்ஸ் மற்றும் 5,000 நிட்களுக்கு மேல் பிரகாசம் கொண்ட இரட்டை 1.41-இன்ச் மைக்ரோ ஓஎல்இடி டிஸ்ப்ளேகளைக் கொண்டிருக்கலாம். இது நம்பகமான டிப்ஸ்டர் மூலம் கிடைத்த தரவுகளாகும். இந்த சாதனம் Meta Platforms Inc.-ன் Quest 2ஐ விட ஏழு மடங்கு விலை அதிகமாக இருக்கும். அது மட்டும் அல்லாது CCS இன்சைட்டின் படி, தற்போது 18 மில்லியன் யூனிட்கள் கொண்ட மிகப்பெரிய விற்பனையான VR ஹெட்செட் ஆகும். இதனின் விலை சுமார் $3,000 (₹2.48 லட்சம்) இருக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்