Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Samsung-ல் இதுக்கு மேல சூப்பரான அம்சங்களுக்கு எந்த போனும் வர முடியாது | Samsung Galaxy F54 5G Specifications

Priyanka Hochumin Updated:
Samsung-ல் இதுக்கு மேல சூப்பரான அம்சங்களுக்கு எந்த போனும் வர முடியாது | Samsung Galaxy F54 5G SpecificationsRepresentative Image.

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த படைப்பு சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் வரும் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. இந்த போனின் தனித்துவமான அம்சம் மற்றும் வடிவமைப்பிற்காக தனி ரசிகர் கூட்டமே உள்ளது. எனவே, வெளியாகப்போகும் இந்த போனுக்கு பல எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த பதிவில் சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி போனின் அம்சங்கள் பற்றிய விவரங்கள் தரப்படும். அது உங்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

முன்பதிவு - இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு முன்னரே, வெறும் ரூ.999/- செலுத்தி சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்து கொள்ளலாம். இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ. 2,000 மதிப்புள்ள பிரத்தியேக சலுகைகள் தருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Samsung Galaxy F54 5G அம்சங்கள்

இது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸிநோஸ் 1380 சிப்செட்டை கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்54 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். அதனால் பயன்படுத்தும் போது நல்ல பீலிங்கைத் தரும்.

கேமராவைப் பொறுத்த வரையில், 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் போன்ற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி தாறுமாறான புகைப்படங்களை நம்மால் எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும், 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது. ரேம், ஸ்டோரேஜ் - 8GB + 256GB மற்றும் 12GB + 256GB உள்ளிட்ட இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் வருகிறது. அதிக ஸ்டோரேஜ் வேண்டும் எனில், மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி மெமரியை நீடித்துக்கொள்ளலாம். 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வருகிறது. கூடுதலாக, 5ஜி, வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் அளிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்