Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AI 2023 Predications : இனி உலகமே இயந்திரம் மையம் தான் குறிப்பாக நிறுவனங்களில் .... உண்டாகும் மாற்றம்...!

Manoj Krishnamoorthi Updated:
AI 2023 Predications : இனி உலகமே இயந்திரம் மையம் தான் குறிப்பாக நிறுவனங்களில் .... உண்டாகும் மாற்றம்...!Representative Image.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் முன்னேறி கொண்டுதான் இருக்கிறது. நுண்ணுயிர் முதல் விண்கலம் வரை அனைத்தும் இதன் ஒரு சிறிய சாரம் ஆகும். நம் வேலை திறனைக் குறைப்பதில் தொழில்நுட்பத்தில் பல மாற்றங்கள் செய்கிறோம். அதில் ஒன்று தான் ஆர்டிஃபிசியல் இன்டலிஜன்ஸ் (Artificial Intelligence, AI) ஆகும். 

AI பயன்பாடு 2017 இல் 20% இருந்து 2019 இல் 58% வரை முன்னேற்றம் கொண்டது.  குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பிறகு 2022 வரை 50% வரை மட்டும் இருந்தாலும் 2023 இல் இந்நிலை மாறும். கொரோனா பேரிடர் காலத்தின் தாக்கத்திற்கு பிறகு சுமார் 54% நிறுவனங்களின் பார்வை AI மீது திரும்பி உள்ளது. AI பயன்பாடு வணிகத்தில் திறம்பட செயல்படும் என்பதால் 80% நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பத்தை 2023 இல் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 

இந்தியாவில்  AI 

பூருக்கிங் கழகத்தின் அறிக்கையின்படி, AI தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டும் டாப் 10 நாட்டில் இந்தியா ஒன்றாகும். AI அந்நியப்படுத்துதல் நிச்சயமாக இந்தியாவில் US, UK விட அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனால் உலகிலே விரைவில் இந்தியா AI தொழில்நுட்ப புதுமையின் மையமாகவும் அமையலாம்.

AI தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை 2023 இல் $42 பில்லியனாக மாற்றும் எனவும், இதுவே 2035 இல் $ 450-500 BN ஆகவும் மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் ஏற்படும் சிக்கல் என்றால் பலருக்கு வேலையில்லாத நிலை உண்டாகலாம். இருப்பினும் இழக்கும் வாய்ப்புகள் சில இருந்தாலும் பல புதிய வாய்ப்பு பிறக்கும் என்னும் நம்பிக்கையில் AI தொழில்நுட்பத்தை ஆதரிப்போம்.   

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்