Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

48,500 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த ஜாம்பி வைரஸ்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!

Sekar Updated:
48,500 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த ஜாம்பி வைரஸ்.. ஆய்வாளர்கள் அதிர்ச்சி!!Representative Image.

பருவநிலை மாற்றத்தினால் பனிப்பாறைகள் உருகி 48,500 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் புதைந்து போயிருந்த ஜாம்பி வைரஸ், தற்போது மீண்டும் உயிர் பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடனே, ஹாலிவுட் படங்ளில் வரும் ஜாம்பிக்களை போல நினைத்து பதற வேண்டாம். இந்த ஜாம்பி வைரஸ் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒற்றை செல் அமீபா வைரஸ். இந்த வைரஸால் மனிதர்களுக்கு பாதிப்பு இருக்குமா என்பது தற்போது வரை முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. முழுமையான ஆய்வுகள் எதுவும் நடக்கவில்லை என்பதால், இந்த ஜாம்பி வைரஸால் மனிதர்களுக்கு ஆபத்து ஏதும் வருமா என்பதை உறுதியாகக் கூற முடியாத நிலையில்தான் ஆய்வாளர்களும் உள்ளனர். 

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள பெர்மாப்ரோஸ்டிலிருந்து இந்த வைரஸ்களை பிரித்து பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, இந்த ஜாம்பி வகை வைரஸ் குறித்து தெரிய வந்துள்ளது. பனிப்பாறைகளுக்கு அடியில் இருக்கும் இந்த ஜாம்பி வைரஸ்கள் பாண்டோராவைரஸ் யடோமா என்றும் அழைக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள 13 வகை வைரஸ்களுக்கு உயிர்கொடுத்து, ஆய்வு செய்து வருகிறார்கள். அதில் ஒன்று தான் இந்த ஜாம்பி வகை வைரஸ். 

இந்த வைரஸ்கள் பனிப்பாறையில் இருந்து வெளியே வந்தால் எவ்வளவு நாட்கள் உயிரோடு இருக்கும், அவை எவ்வாறு உயிர்பெற்று வாழும் மற்றும் எவ்வாறு தாக்கும் என்பதை கணிப்பது கடினம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் ஒன்று நிச்சயம். மனிதர்களின் செயல்பாடுகளால் பருவநிலை மாறுபாடு அதிகரித்து பனிப்பாறைகள் வேகமாக உருகுவது நிச்சயம் மனித குலத்திற்கே மிகப்பெரும் கேடை விளைவிக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்