Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

பூமியின் மேலோட்டத்தில் சுமார் 10,000 மீட்டர் ஆழத்தில் துளை தோண்டும் சீனா | China Drilling Earths Crust

Priyanka Hochumin Updated:
பூமியின் மேலோட்டத்தில் சுமார் 10,000 மீட்டர் ஆழத்தில் துளை தோண்டும் சீனா | China Drilling Earths CrustRepresentative Image.

பூமியின் மேலோட்டத்தில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் துளை தோண்டும் பணியை சீனா தொடங்கியுள்ளது.

பூமி, ஆகாயம், செவ்வாய் கிரகம் என்று பல விண்வெளி ஆர்ச்சிகளை மனித குளம் தற்போது நடத்தி வருகிறது. அதில் சீனா தற்போது பூமியின் மேற்புறத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் துளை தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பூமியின் உள் மற்றும் வெளிப்புற எல்லைகளை விண்வெளியிலும் கண்காணிக்கும் முடியும் என்று கூறப்படுகிறது. இது வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள தாரிம் படுகையில் 10,000 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட குழுவினர் பூமியை ஆழமாக தோண்டி, 10 க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகளை ஊடுருவ திட்டமிட்டுள்ளனர். அதனைக் கொண்டு பூமி நிலப்பரப்புகளின் பரிணாமம், காலநிலை மாற்றம் மற்றும் வாழ்க்கையின் விநியோகம் உட்பட பூமியின் கண்டங்களின் வரலாற்றை மறுகட்டமைக்க பயன்படுகிறது. கான்டினென்டல் அடுக்குகள் என்பது பாறைகளின் அடுக்குகளாகும், அவை பூமியின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கான முக்கிய ஆதாரமாக பயன்படுத்தலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இது பூகம்பங்கள், எரிமலை வெடிப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற கடந்த கால நிகழ்வுகளை கண்டறிய பயன்படுத்தப்படலாம். மேலும் பண்டைய வாழ்க்கை வடிவங்களை அடையாளம் காணவும், ஆய்வு செய்யவும் உபயோகமாக இருக்கும்.

ஆழ்துளை கிணறு 11,100 மீட்டர் ஆழத்தில் ஊடுருவி, சீனாவின் மிகப்பெரிய பாலைவனமான தக்லிமாகன் பாலைவனத்தின் உள்பகுதியில் அமைந்துள்ளது. எனவே, இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு பல சவாலான சூழ்நிலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி பூமியின் மேற்பரப்பில் தோண்டும் பணி தொடங்கியுள்ள நிலையில், சீனாவிடம் இருந்து எந்த உறுதியான தகவலும் அறிவிக்கப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்