Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சூரிய கிரகணம் 2023 எங்கு, எப்போது பார்க்கலாம்..? | Surya Grahan 2023 Places

Gowthami Subramani Updated:
சூரிய கிரகணம் 2023 எங்கு, எப்போது பார்க்கலாம்..? | Surya Grahan 2023 PlacesRepresentative Image.

சூரிய கிரகணம் 2023: இந்த 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமானது, ஏப்ரல் 20 ஆம் தேதி ஏற்பட உள்ளது. இது தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரம் குறித்த விவரங்களையும், எங்கு தெரியும் என்பது குறித்த விவரங்களையும் இதில் காண்போம்.

சூரிய கிரகணம் 2023 எங்கு, எப்போது பார்க்கலாம்..? | Surya Grahan 2023 PlacesRepresentative Image

சூரிய கிரகணம் 2023 எப்போது

வானில் நடக்கக் கூடிய அரிய நிகழ்வாகவே கிரகணங்கள் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக, ஏப்ரல் 20 ஆம் தேதி வானில் ஏற்பட உள்ளது. பொதுவாக, கிரகணம் ஏற்படும் நேரத்தை அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், கிரகண நேரத்தில் வெளியில் செல்வது கூடாது எனக் கூறுவர்.

சூரிய கிரகணம் 2023 எங்கு, எப்போது பார்க்கலாம்..? | Surya Grahan 2023 PlacesRepresentative Image

கிரகணம் ஏற்படும் நேரம்

இந்த சூரிய கிரகணம் ஆனது, ஏப்ரல் 20 ஆம் தேதி வியாழன் அன்று, காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. அதன் படி, காலை 09.46 மணிக்கு, சூரிய கிரகணத்தின் உச்ச நிலையாக முழு சூரிய கிரகணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

சூரிய கிரகணம் 2023 எங்கு, எப்போது பார்க்கலாம்..? | Surya Grahan 2023 PlacesRepresentative Image

இந்தியாவில் சூரிய கிரகணம்

இந்த சூரிய கிரகணத்தை இந்தியாவில் இந்த முறை காண முடியாது எனக் கூறப்படுகிறது.

சூரிய கிரகணம் காணப்படும் இடங்கள்

இந்த 2023 ஆம் ஆண்டின் சூரிய கிரகணம் தென்படும் இடங்கள், ஆஸ்திரேலியா, பசிபிக் பெருங்கடல், தென்கிழக்கு ஆசிய பகுதி, அண்டார்டிக்கா, இந்தியப் பெருங்கடல் போன்ற பகுதிகளில் குறைந்தபட்சம் பகுதி கிரகணத்தையாவது காணலாம்.

மேலும், முழு சூரிய கிரகணத்தை ஆஸ்திரேலியா பகுதியின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதிகளில் காண முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்