Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Zoom மீட்டிங் வீடியோ காலில்...வீட்டை சுற்றி காண்பிக்க மறுத்த பெண் ஊழியருக்கு...பாஸ் செய்த அட்டூழியம்!

Priyanka Hochumin November 01, 2022 & 17:00 [IST]
Zoom மீட்டிங் வீடியோ காலில்...வீட்டை சுற்றி காண்பிக்க மறுத்த பெண் ஊழியருக்கு...பாஸ் செய்த அட்டூழியம்!Representative Image.

நிறுவனத்தில் வேலை செய்யும் பெண் ஒருவரின் வீட்டை சுற்றி காமிக்குமாறு Zoom மீட்டிங் வீடியோ காலில் பாஸ் கேட்க, அதை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை அதிக வேலை கொடுத்து டார்சர் செய்துள்ளதாக வெளியிட்ட டிக் டாக் பதிவு வைரலாகி வருகிறது.

அலியா என்பவர் தான் வேலை செய்யும் இடத்தில், அவரின் பாஸின் ஆளுமைக்கு ஒத்துப்போகாமையும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தொடர்ந்து கேட்டு கஷ்டப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட, வாராந்திர மீட்டிங் zoom வீடியோ கால் மூலம் நடைபெற்றது. அப்போது அலியாவின் wifi சரியாக வேலை செய்யாததால் பஸ்-க்கு தகவல் தெரிவித்து, சிறிது நேரத்திற்கு பின்னர் மீட்டிங்கில் பங்கேற்றார். 

அப்போது பணியில் அடுத்து என்ன வேலை செய்யப் போகிறோம் போன்ற விவரங்களைப் பற்றி பேசாமல், அலியாவின் வீட்டை சுற்றிக் காமிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருக்கு அதிக வேலை கொடுத்து பழிவாங்கியுள்ளார். மேலும் இரண்டு பெரிய ப்ராஜெக்ட்களை குறுகிய காலத்திற்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான அலியா டிக் டாக்கில் இது போன்று பதிவிட்டுள்ளார் " என்னுடைய வீட்டை சுற்றிக் காமிக்குமாறு பாஸ் கேட்டார், அதற்கு மறுத்ததால் எனக்கு அதிக வேலை கொடுத்து அலைக்கழித்துள்ளார். எனவே, உங்களுக்கு ஒரு குட் நியூஸ், நான் என்னுடைய வேலையை ராஜினாமா செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த டிக் டாக் பதிவு வைரலாகி அனைவரும் இவரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும் தங்களுடைய பணி இடங்களில் நடக்கும் கொடுமைகளை கூறி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு எங்கு போனாலும் இது போன்ற தொல்லைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்