Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜியோ ஆவது ஏர்டெல் ஆவது...டிவி சேனல் & OTT சேர்த்து...இவ்ளோ கம்மியான விலையா?

Priyanka Hochumin Updated:
ஜியோ ஆவது ஏர்டெல் ஆவது...டிவி சேனல் & OTT சேர்த்து...இவ்ளோ கம்மியான விலையா?Representative Image.

உள்ளங்கையில் உலகம் என்பதற்கு சான்றாக இன்டர்நெட் இருந்தால் போதும் எல்லா விஷயத்தையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்தியாவைப் பொறுத்த வரையில் அப்படியான இன்டர்நெட்டை வழங்க - ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் தான் முன்னையில் இருக்கின்றனர். ஆனால் இப்போது அவர்களுக்கு போட்டியாக 'எக்ஸிடெல்' என்னும் நிறுவனம் பல திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்படி ஒரு நிறுவனம் இந்தியாவில் இருக்கிறதா, அப்படி என்னென்ன மலிவான திட்டங்களை அது தருகிறது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் பாப்போம்.

எக்ஸிடெல் நிறுவனம்

இந்தியாவை இருப்பிடமாக கொண்டு 05 மார்ச் 2015 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய இன்டர்நெட் கனெக்ஷன் அல்லது சர்வீஸ் ப்ரொவைடர் வழங்குவதில் எக்ஸிடெல் நிறுவனமும் ஒன்றாகும். இந்த சேவை மூலம் Wi-Fi, ஓடிடி பிளாட்பார்ம் மற்றும் நேரடி தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது. மாதாந்திர திட்டத்திற்கு ஏற்ப நமக்கு தேவையானவற்றை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். அவற்றுள் தி கிக்ஸ்டார்ட்டர் (the kickstarter), தி கேபிள் கட்டர் (the cable cutter), தி பீஸ்ட் (the beast) ஆகிய திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் நன்மை என்ன என்று பாப்போம்.

தி கிக்ஸ்டார்ட்டர்:

பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்தாக இருந்தால் இதனுள் மூன்று அம்சங்கள் உள்ளது. ரூ.667-க்கு 3 மாதங்கள் வேலிட்டிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் கிடைக்கும். அடுத்து ரூ.499-க்கு 6 மாதங்கள் வேலிடிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் வழங்கப்படும். இறுதியாக ரூ.424-க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி உடன் 300 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் விலைக்கு ஏற்ற இன்டர்நெட் வேகம் மாறுபடும்.

தி கேபிள் கட்டர்:

இந்த திட்டத்தை பயனர்கள் தேர்வு செய்தால் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலிவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) போன்ற 12 ஓடிடி தளங்களின் சப்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும் ஒரே நேரத்தில் டிவி சேனல் மற்றும் ஓடிடி தளங்களை பார்த்து மகிழலாம். அத்துடன் ரூ.847-க்கு 3 மாதங்கள் வேலிடிட்டி உடன் 400 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் மற்றும் ரூ.599-க்கு 12 மாதங்கள் வேலிடிட்டி உடன் 400 எம்பிபிஎஸ் வரையிலான இன்டர்நெட் வேகம் கிடைக்கும்.

தி பீஸ்ட்:

இதில் மொத்தம் மூன்று திட்டங்கள் இருக்கிறது, அவை விலைக்கு ஏற்ப இன்டர்நெட் வேகம் மட்டும் மாறுபடும்.  தி பீஸ்ட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்கள் ரூ.717-க்கு 3 மாதம் வேலிடிட்டியும், ரூ.550-க்கு 6 மாதம் வேலிடிட்டியும், ரூ.474-க்கு 12 மாதம் வேலிடிட்டியும் உடன் இன்டர்நெட் வேகம் மாறுபட்டு கிடைக்கும். எனவே, இந்த திட்டங்களுக்கு கனெக்சன் கொடுக்கும் செலவு, பாதுகாப்பு வைப்புத்தொகை மற்றும் கூடுதல் கட்டணங்கள் உள்ளிட்டவை வசூலிக்க படமாட்டாது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்