Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எப்போதும் இல்லாத கம்மி விலையில் ஐபோன்கள்.. பட்டைய கிளப்பும் பிளிப்கார்ட் ஆஃபர்! | Flipkart Big Saving Days Sale 2023

Nandhinipriya Ganeshan Updated:
எப்போதும் இல்லாத கம்மி விலையில் ஐபோன்கள்.. பட்டைய கிளப்பும் பிளிப்கார்ட் ஆஃபர்! | Flipkart Big Saving Days Sale 2023Representative Image.

புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோருக்கு சூப்பர் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபோனே ஆண்ட்ராய்டு ஃபோன் விலைக்கு வாங்கலாம். அட ஆமாங்க! பிளிப்கார்ட் நிறுவனம் தனது வலைத்தளத்தில் அவ்வபோது சிறப்பு விற்பனைகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது சுதந்திர தின சிறப்பு விற்பனையாக 'Big Saving Days Sale 2023' தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது. இதன் மூலம் பிரபலமான ஆப்பிள் ஐபோன்களையே தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த சிறப்பு விற்பனையில் எந்தெந்த ஐபோன் மாடல்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

எப்போதும் இல்லாத கம்மி விலையில் ஐபோன்கள்.. பட்டைய கிளப்பும் பிளிப்கார்ட் ஆஃபர்! | Flipkart Big Saving Days Sale 2023Representative Image

பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேல் 2023:

இந்த பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில் ஐபோன் 13 (iPhone 13), ஐபோன் 14 ப்ரோ (iPhone 14 Pro), ப்ரோ மேக்ஸ் (iPhone 14 Pro Max), ஐபோன் 12 (iPhone 12) ஆகிய மாடல்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு குறைவான விலையில் வாங்க கிடைக்கின்றன.

ஐபோன் 12 விலை: ஐபோன் 12 மாடலின் தற்போதைய தள்ளுபடி விலை ரூ.56,999 ஆகும். இது வாங்குவதற்கு பதிலாக இன்னும் சில ஆயிரங்கள் கூடுதலாக சேர்த்தால் ஐபோன் 13 போனே வாங்கிவிடலாம். ஐபோன் 13 இன் தள்ளுபடி விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 13 விலை: ஐபோன் 13 மாடலின் அசல் விலை ரூ.69,900 ஆகும். ஆனால், பிளிப்கார்ட்டில் தற்போது ரூ.58,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.11,401 சேமிக்க முடியும். ஒருவேளை கோட்டக் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், ரூ.1000 தள்ளுபடியும் கிடைக்கும். இதன் மூலம் போனின் விலையானது ரூ.57,499 ஆக குறைக்கப்படும். 

ஐபோன் 14 ப்ரோ விலை: ஐபோன் 14 ப்ரோவின் அசல் விலை ரூ.1,29,900 ஆகும். ஆனால், தற்போது ரூ.1,17,999 க்கு வாங்கலாம். இதன் மூலம் ரூ.11,901 தள்ளுபடியை பெறலாம். இதுதவிர கோட்டக் மற்றும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. இதன் மூலம் போனின் விலையானது ரூ.1,17,249 ஆக குறைக்கப்படும். இதுமட்டுமல்லாமல், உங்களுடைய பழைய ஃபோனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலமும் இன்னும் அதிகப்படியான தள்ளுபடியை பெறலாம்.

ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலை: ஒருவேளை ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்க விரும்பினால், ஐபோன் 14 ப்ரோ போனின் விலையை விட கூடுதலாக ரூ.10,000 சேர்த்துக் கொண்டாலே போதுமானது. ஐபோன் 14 ப்ரோ மேக்ஸின் அசல் விலை ரூ.1,39,900 ஆகும். ஆனால், தற்போது தள்ளுபடியில் ரூ.1,26,999 க்கு வாங்க முடியும். தற்போது வரை ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் தான் ஆப்பிளின் மிகவும் விலையுயர்ந்த மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்