Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Fun Facts about Technology 1: நமக்கு எல்லாம் தெரியும்னு இருக்குறவங்களுக்கு...இது தெரியுமா?

Priyanka Hochumin August 08, 2022 & 17:00 [IST]
Fun Facts about Technology 1: நமக்கு எல்லாம் தெரியும்னு இருக்குறவங்களுக்கு...இது தெரியுமா?Representative Image.

Fun Facts about Technology 1: நமக்கு டெக்னாலஜி என்றாலே நியாபகத்துக்கு வருவது ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற கேட்ஜெட்ஸ் தான். இதனின் ஒருபுறம் தான் நமக்கு தெரியும், ஆனால் அதைப் பற்றி தெரியாத பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளது. அதனை பரவலாக கண்டறிந்து பகிர்ந்துள்ளோம். இதனை படித்து டெக்னாலஜியைப் பற்றிய பல திடுக்கிடும் உண்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்.

1. இவ்ளோ பெருசா...

உங்களுக்கு தெரியுமா? முதன் முதலில் கம்ப்யூட்டர் என்ற வார்த்தை 1613 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் பிரைத்வைட்டின், 'தி யோங் மான்ஸ் க்ளீனிங்ஸ்' என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த வார்த்தை கணக்கீடுகள் (Computations) அல்லது கணக்கீடுகளைச் (Calculations) செய்த ஒரு மனிதனை விவரித்ததாகக் கூறப்படுகிறது. என்ன தான் இந்த வார்த்தை 1613 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டாலும், முதல் கம்ப்யூட்டரானது 1822 இல் சார்லஸ் பாபேஜ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தெரியும், ஆனால் அந்த கம்ப்யூட்டர் எவ்ளோ பெரியது தெரியுமா? கிட்டத்தட்ட 30,000 கிலோ எடையும், 2.5 மீ உயரத்தில் நின்றதாம். இப்ப யோசிச்சு பாருங்க, அதனைப் பயன்படுத்தி இமெயில் அல்லது சோசியல் மீடியாவை சரிபார்க்க எப்படி வேலை செய்திருக்கும் என்று.

 

2. Wikipedia இப்படி தான் வேலை செய்யுதா?

நாம் கூகுளில் எதையாவது தேடும் பொழுது ஆரம்பத்தில் இருந்து ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள Wikipedia-வை தான் உபயோகிப்போம். அதில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் உள்ளது, அதே போல் வளவள என்று தேவையில்லாத விஷயங்கள் உள்ளது. விக்கிப்பீடியா என்றால் என்ன தெரியுமா? விக்கிப்பீடியா என்பது வெறும் கூட்டத்தால் உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும் (crowd-sourced encyclopedia). ஆனால் இந்த தளமானது ஆயிரக்கணக்கான தானியங்கி நிரல்களால் (போட்கள்) இயங்குகிறது என்பது உங்களில் எத்தனை பேத்துக்கு தெரியும். விக்கிப்பீடியாவில் இருக்கும் பக்கங்களை பராமரிக்கும் பணிக்காக சுமார் 2456 பாட் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Must Read: ஆங்கில விக்கிப்பீடியாவின் அளவை கணக்கிடுவது எப்படி? அதனை ட்டுரைகளின் எண்ணிக்கை (no of articles) , சொற்களின் எண்ணிக்கை (number of words), பக்கங்களின் எண்ணிக்கை (number of pages) மற்றும் தரவுத்தளத்தின் அளவு (the size of the database) போன்ற வெவ்வேறு வழிகளில் அளவிட முடியும். 8 ஆகஸ்ட் 2022 நிலவரப்படி, ஆங்கில விக்கிப்பீடியாவில்,

கட்டுரைகள் - 6,561,968 ஆர்டிகள்.

சொற்களை - 4 பில்லியனுக்கும் அதிகமான சொற்கள் (ஒரு கட்டுரைக்கு சராசரியாக 636 வார்த்தைகள்).

மொத்த பக்கங்களின் எண்ணிக்கை - 56,688,763 பக்கங்கள்.

இந்த வாரத்திற்கான Fun Facts about Technology பற்றி பார்த்துள்ளோம். இன்னும் அதிகப்படியான சுவாரஸ்ய தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்ள அடுத்த வாரம் வரை காத்திருங்கள். இந்த பதிவு உங்களுக்கு தெரியாத செய்தியை கற்றுக்கொடுத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

Fun facts about technology, fun facts about technology 2022, fun facts about technology history, fun facts about technology advancement, fun facts about technology in education, fun facts about technology tamil, did you know facts on technology, what is a fact about technology, fun technology facts, interesting facts about technology, interesting facts about technology 2022, interesting facts about technology 2021, interesting facts about technology today in tamil, interesting facts about technology today news.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்