சாம்சங் மாடலுக்கு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் மதிப்பில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில், சாம்சங் நிறுவனம் தங்களின் புதிய சாம்சங் கேலக்சி ஏ05 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போனின் முக்கிய விவரங்கள், கலர் ஆப்ஷன் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Samsung Galaxy A05 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்சி ஏ05 ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த போனின் மாடல் நம்பர் SM-A055F என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராவைப் பொறுத்த வரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் வரலாம்.. மேலும் செல்பீ பயன்பாட்டிற்கு 8எம்பி கேமரா செட்டப் அளிக்கப்படும். 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட சார்ஜிங் ஆதரவை அளிக்கும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு வரும்.
வைஃபை, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவு அளிக்கட்டுள்ளதாம். இதனை சிறப்புக்கள் கொண்ட ஸ்மார்ட்போன் லைட் க்ரீன், சில்வர் மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் அறிமுகம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில், இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தைக்கு வருவதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…