Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிளே ஸ்டோரை அப்டேட் செய்யும் கூகுள்.. இனிமே இந்த அப்ளிகேஷன்லாம் இருக்காது..?

Gowthami Subramani August 01, 2022 & 17:20 [IST]
பிளே ஸ்டோரை அப்டேட் செய்யும் கூகுள்.. இனிமே இந்த அப்ளிகேஷன்லாம் இருக்காது..?Representative Image.

கூகுள் நிறுவனம் கூகுள் பிளே ஸ்டோரின் பாலிசிகளை அப்டேட் செய்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், ஆன்ட்ராய்டு பயன்பாடுகள் சில தடை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

கூகுளின் நோக்கம்

கூகுள் பிளே ஸ்டோரில் டெவலப்பர்களுக்கென புதுப்பிக்கப்பட்ட பிளே ஸ்டோரின் புதிய கொள்கைகள் தவறான தகவல் பரவுதல், ஆள் மாறாட்டம், மற்றும் Apps சார்ந்த விளம்பரங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இது போன்றவற்றிலிருந்து விடுபட்டு புதிய கொள்கைகளைப் பயன்படுத்தி, புதிய பயன்பாட்டு அனுபவத்தையும், அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் பயனர்களின் பாதுகாப்பையும் மேம்படுத்துவதையே கூகுளின் நோக்கமாகும்.

CopyCat Apps

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது கொரோனா காலத்தில் சோசியல் மீடியா பயன்பாடுகள், புதிதாக அப்ளிகேஷன்களை உருவாக்குதல், Youtube Channels, Instagram, உள்ளிட்டவற்றில் நிறைய பயனர்கள் உள்நுழைந்துள்ளனர். இதனால், கூகுள் நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக, Google Play Store-ல் உள்ள CopyCat App- பயன்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புகிறது.

புதிய அப்டேட்

இந்தப் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கொள்கையின் படி, இப்போது அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகள் அரசு நிறுவனங்களின் சின்னங்கள் மற்றும் தேசிய சின்னங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும், Unwanted Developers-கள், டிவி நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனத்தின் Logo அல்லது இமேஜைப் பயன்படுத்த அனுமதி இல்லை.

தடை செய்யப்படும் அப்ளிகேஷன்ஸ்

வேறு அப்ளிகேஷனாகவோ அல்லது வேறு ஒருவராக ஆள் மாறாட்டம் செய்வதன் மூலம், பயனர்களை தவறாக வழிநடத்தக்கூடிய அப்ளிகேஷன்கள் இனி அனுமதிக்கப்படாது. கூகுளின் புதிதான இந்த கொள்கை ஆகஸ்ட் 31 ஆம் நாள் முதல் அமலுக்கு வர உள்ளது.

மேலும், Profressional Health Advice தொடர்பானவற்றில் தவறான தகவல்களை பரப்பும் பயன்பாடுகள் இனி அனுமதிக்கப்படாது. கூகுளின் மற்றொரு கொள்கை செப்டம்பர் மாதம் 30 ஆம் முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன் படி, 15 வினாடிகளுக்குப் பிறகு Full Screen-ல் தோன்றும் விளம்பரங்களை Close செய்யும் படி கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, கேம் விளையாடும் போதோ அல்லது கேமில் அடுத்த நிலைக்கு முன்னேறும் போதோ விளம்பரங்கள் இருப்பின் அதனைத் தடை செய்ய உள்ளது. இருந்த போதிலும், ரிவார்டைப் பெறுவதற்காக பார்க்கப்படும் விளம்பரங்கள் 15-விநாடிகளுக்கு மேல் வரலாம்.

இதையும் தடை செய்த கூகுள்

ஆன்ட்ராய்டின் பில்ட்-இன் சர்வீஸான VPN-ஐப் பயன்படுத்தி பயனர்களின் தரவு மற்றும் விளம்பர மோசடிகளைத் தடுப்பதாக கூகுள் எச்சரித்துள்ளது.

அதே போல, இந்த புதிய கொள்கைகளுடன் வரும் செப்டம்பர் மாதம் 30, 2022 ஆம் நாள் முதல் அப்ளிகேஷன் பயனர்கள், பயன்பாட்டிலிருந்து Subscriptions-ஐ ரத்து செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்