Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

வேலை தேடுபவர்களே ஜாக்கிரதை..! இப்டி தான் ஹேக்கர்ஸ் உங்களை குறிவைக்கிறார்களாம்..

Nandhinipriya Ganeshan Updated:
வேலை தேடுபவர்களே ஜாக்கிரதை..! இப்டி தான் ஹேக்கர்ஸ் உங்களை குறிவைக்கிறார்களாம்.. Representative Image.

கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு உலகளவில் பொருளாதார சூழல் ரொம்பவே மோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பெரிய நிறுவனங்கள்கூட தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதனால், நம்மில்பலரும் வேலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம். இந்த சூழலைப் பயன்படுத்தி கொண்டு ஹேக்கர்ஸ் முக்கியமான தகவல்களைத் திருடும் முயற்சியில் வேலை தேடுபவர்களை குறிவைத்து வருகிறார்களாம். அதற்காக ஃபிஷிங் மற்றும் மால்வேர் கேம்பகென்ஸ் பயன்படுத்துவதாகவும் சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ட்ரெல்லிக்ஸ் தெரிவித்துள்ளது. 

போலி நிறுவனங்கள் அல்லது ஆட்சேர்ப்பு முகவர்களிடமிருந்து வேலை தேடுபவர்களுக்கு அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள், அல்லது தனிப்பட்ட தகவல் அல்லது உள்நுழைவு சான்றுகள் மூலமாக ஒருவரது முக்கிய தரவுகள் திருடப்படுகின்றன. அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்கள் பார்ப்பதற்கு உண்மையானதாக தோன்றும், ஆனால் ஃபினான்சியல் தரவு அல்லது கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தகவல்களை அதன் முக்கியமான நோக்கமாகும். 

அதுமட்டுமல்லாமல், வேலை தேடுபவர்களிடம் URLகளை அனுப்பி அவர்களின் சாதனங்களை மால்வேர் மூலம் பாதிக்கக்கூடிய தளங்களுக்கு வரவழைக்கின்றன அல்லது சேதப்படுத்தும் மென்பொருளைப் பதிவிறக்கவும் செய்கின்றன. இந்த மால்வேர் தரவை திருடி பாதிக்கப்பட்டவரின் சாதனத்தை ஹேக் செய்துவிடுகின்றனர். 

இதுஒருபக்கம் இருந்தாலும், மறுபுறம் ஹேக்கர்ஸ் வேலை தேடுபவர்கள்போல் காட்டிக்கொண்டு, வேலை விண்ணப்பங்களாக மாறுவேடமிட்ட இணைப்புகள் அல்லது URLகள் மூலம் தீம்பொருளை விநியோகிப்பதன் மூலம் நிறுவனங்களை குறிவைப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமான தகவலுக்கான அங்கீகாரமற்ற அணுகலைப் பெறுதல், தனிப்பட்ட தரவைத் திருடுதல் மற்றும் ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கத்தில் இது போன்ற தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்