Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிமே Zomota, Swiggy-லாம் கிடையாது...இதுல கம்மி விலைல வாங்கிக்கலாம் | ONDC vs Zomoto Swiggy

Priyanka Hochumin Updated:
இனிமே Zomota, Swiggy-லாம் கிடையாது...இதுல கம்மி விலைல வாங்கிக்கலாம் | ONDC vs Zomoto SwiggyRepresentative Image.

சமூக வலைத்தளத்தில் தற்போது பரவலாக பேசப்படுவது டிஜிட்டல் வர்த்தகத்தின் திறந்த நெட்வொர்க் அல்லது ONDC எனப்படும் ஆன்லைன் ஆர்டர் செய்யும் செயலியைப் பற்றி தான். இந்த பதிவில் அதன் நன்மைகள் மற்றும் அந்த செயலி யாருக்கு பாதகமாக இருக்கிறது உள்ளிட்ட விவரங்களைப் பற்றி பார்க்கலாம்.

ONDC என்றால் என்ன?

இந்திய அரசாங்கத்தின் (GoI) தொழில்நுட்ப உள்கட்டமைப்பு கீழ் இருப்பது தான் 'டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த நெட்வொர்க்' (ONDC). இது ஒரு நெட்வொர்க் சென்ரிக் மாடல், எனவே விற்பவர்களும் வாங்குபவர்களும் "இந்த ஓபன் நெட்வொர்க்குடன் இயங்குதளங்கள்/பயன்பாடுகள் இணைக்கப்பட்டிருக்கும் வரை" அவர்கள் பயன்படுத்தும் தளங்கள்/பயன்பாடுகளைப் பொருட்படுத்தாமல் பரிவர்த்தனை செய்யலாம்.

செயல்பாடு

இது மளிகை, உணவு விநியோகம், அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு, ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மொபைலிட்டி போன்ற வகைகளில் 35,000 க்கும் மேற்பட்ட வணிகர்களுடன் நேரலையில் உள்ளது. மேலும் Dunzo, Delhivery, boAt, ITC Meesho, Paytm மற்றும் PhonePe இன் பின்கோடு போன்ற 46 நெட்வொர்க் பங்கேற்பாளர்கள் உள்ளனர். அது மட்டும் இன்றி 450 பங்கேற்பாளர்கள் ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பதாகவும் ONDC கூறுகிறது.

இதன் சிறப்புக்கள்

இந்த செயலி தொடங்கப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி முதல் தினமும் ONDC இல் 10,000-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காரணம்? Zomota மற்றும் Swiggy செயலிகளைக் காட்டிலும் ONDC இல் வாங்கும் பொருட்களின் விலை மிகவும் குறைவாக இருப்பதாக மக்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதனால் மக்கள் இனிமே Zomota, Swiggy செயலிகளில் இருந்து ONDC-க்கு முற்றிலுமாக மாறி விடுவார்கள் என்றும் பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். அதற்கான ஆதாரம் இதோ!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்