Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,050.89
561.90sensex(0.78%)
நிஃப்டி22,136.70
140.85sensex(0.64%)
USD
81.57
Exclusive

பேட்டரி வெடித்து 8 மாத குழந்தை மரணம்...இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்!

Priyanka Hochumin September 14, 2022 & 17:45 [IST]
பேட்டரி வெடித்து 8 மாத குழந்தை மரணம்...இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்!Representative Image.

நீங்கள் தினமும் நாட்டுநடப்பை தெரிந்துகொள்பவராக இருந்தால் கட்டாயம் இந்த தகவல் உங்களுக்கு தெரிந்திருக்கும். உத்திரபிரதேச மாநிலம் பரேலி பகுதியில் போனின் பேட்டரி வெடித்து 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது மட்டுமின்றி நிறைய சம்பவங்கள் இது போன்று நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதை கேட்டதும் நமக்கு இப்படி நடக்குமா? இனிமேல் கவனமாக இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் உங்களுக்குள் ஓடும். கவலை வேண்டாம்! முதலில் எதனால் போன் தீ பிடிக்கிறது அல்லது வெடிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

1. உங்களுடைய மொபைல் அல்லது பேட்டரி வீக்கமாக இருந்தால் உடனே அதனை தூக்கிவிடுங்கள். மற்றும் போனின் பின்பகுதி சமமாக இல்லை என்றால் அதையும் தூக்கிவிடுகள்.

2. நீங்கள் வைத்திருக்கும் போனில் விரிசல் அல்லது கிராக் இருந்தால் அதன் மூலம் மழை நீர் அல்லது வியர்வை உள்ளே போக வாய்ப்புள்ளது. இதனால் இரசாயன எதிர்வினை அல்லது உள்ளிருக்கும் கூறுகளை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளது. இது ஷார்ட் சர்க்யூட், ஓவர் ஹீட்டிங் ஆகியவற்றிற்கு வழிவகுக்கலாம்.

3. போனுடன் வரும் சார்ஜர் மற்றும் சார்ஜிங் கேபிளை பயன்படுத்தவும். ஒருவேளை புது சார்ஜர் அல்லது சார்ஜிங் கேபிள் வாங்க வேண்டும் என்றால் பிராண்டானதை பயன்படுத்துங்கள். ஏனெனில் மலிவு விலையில் வாங்கி போனின் பேட்டரியை சேதப்படுத்தாதீர்கள். மேலும் தீய்ந்த அல்லது உருகிய சார்ஜிங் கேபிளை பயன்படுத்த வேண்டாம். 

4. தேர்ட் பார்ட்டி அல்லது போலியான பேட்டரிகளை யூஸ் செய்யாதீர்கள். ஏனெனில் அவை மோசமாக தயாரிக்கப்பட்ட லித்தியம்-அயன் பேட்டரி என்பதால் எப்போதுமே ஓவர் ஹீட்டிங் ஆகவே இருக்கும்.

5. நீங்க காரில் செல்லும் போது எக்காரணத்தை கொண்டும் காரில் இருக்கும் அடாப்டரை பயன்படுத்தி சார்ஜ் செய்ய வேண்டாம். ஏனெனில் கார் உற்பத்தியாளர்கள் தேர்ட் பார்ட்டி டீலர்களிடம் இருந்து தான் பொருட்களை வாங்குவார்கள். எனவே அந்த வயரிங் ஒழுங்காக இருக்காத நிலையில் நீங்கள் சார்ஜ் செய்தால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

6. போனின் பேட்டரி ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையின் கீழ் மட்டுமே வேலை செய்யும். எனவே, அதிக வெப்பமாக இருக்கும் இடத்தில போனை அதிகம் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

7. போன் 100% வரை சார்ஜ் ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிக சார்ஜ் ஆனாலே போனின் பேட்டரி விரிவுபடுத்தப்பட்டு பேட்டரி வெடிக்க காரணமாகிவிடும்.

8. உங்கள் போனை செக் செய் லோக்கல் கடைகளில் கொடுக்க வேண்டாம். போன் பிராண்டின் ஷோ ரூம்க்கு சென்று பழுது பாருங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்