Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Huawei Mate 50 Pro Price in India: மாஸ்ஸான அம்சங்களுடன் புதிய Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்!

Priyanka Hochumin August 23, 2022 & 11:40 [IST]
Huawei Mate 50 Pro Price in India: மாஸ்ஸான அம்சங்களுடன் புதிய Huawei Mate 50 சீரிஸ் அறிமுகம்!Representative Image.

Huawei Mate 50 Pro Price in India: சீனாவில் வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி Huawei Mate 50 சீரிஸ் அறிமுகமாக தயாராகிவிட்டது. Huawei, Weibo வழியாக, திங்களன்று தனது சொந்த நாட்டில் புதிய மேட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வருகையை உறுதி செய்துள்ளது.  Huawei Mate 50, Huawei Mate 50e, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகிய நான்கு மாடல்கள் அடங்கும். Huawei Mate 50 சீரிஸ் 2020 இல் வெளியான Huawei Mate 40 மாடல்களின் வாரிசாக திகழும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நன்கு மாடல்களும் Kirin 9000S SoC மூலம் இயக்கப்படலாம் மற்றும் நிறுவனத்தின் சமீபத்திய HarmonyOS 3.0 இயங்குதளத்தில் இயங்கலாம்.

Huawei Mate 50 இல் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.28-இன்ச் முதல் 6.56-இன்ச் full-HD OLED டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 1,225x2,800 பிக்சல் ரிசொல்யூஷன் கொண்டு வரும். ஸ்டோரேஜை பொறுத்தவரை 8GB ரேம் மற்றும் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் பேக் செய்யும் என கூறப்படுகிறது. 50 மெகாபிக்சல் IMX766 சென்சார் மூலம் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 66W வேகமான சார்ஜிங் ஆதரவை வழங்கும் 4,400mAh பேட்டரி ஆகியவை சாதனத்தின் பிற எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் ஆகும்.      

Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS

வரப்போகும் Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS 6.78-இன்ச் அல்லது 6.81-இன்ச் முழு-HD+ (1,212x2,612 பிக்சல்கள்) வளைந்த AMOLED டிஸ்ப்ளே 120Hz வரை மாறுபடும் புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12GB LPDDR5 ரேம் மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜை வழங்கும். 50-மெகாபிக்சல் IMX800 சென்சார் மூலம் ஹைலைட் செய்யப்பட்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பை கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கும் 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Huawei Mate 50e அம்சங்கள்

இதில் 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.28-இன்ச் முதல் 6.56-இன்ச் முழு-HD+ (1,225x2,800 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 66W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரி கொண்டு வரலாம். மேலும் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய தகவல்: கடைசியாக வெளியான தகவல் படி, Huawei Mate 50, Huawei Mate 50 Pro மற்றும் Huawei Mate 50 RS ஆகியவை Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படும். ஆனால் Huawei Mate 50e ஆனது, Snapdragon 778G SoC ஐக் கொண்டிருக்கும். மேலும் இந்த நான்கு மாடல்களும் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Huawei mate 50 pro price in india, huawei mate 50 pro, huawei mate 50 pro price in Pakistan, huawei mate 50 release date, huawei mate 50 pro launch date, huawei mate 50 pro 2022, huawei mate 50 pro full specification, huawei mate 50 series, huawei mate 50 rs price in banglasdesh.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்