தற்போது அதிகப்படியான மொபைல்களுக்கு ஒரே சார்ஜர் தான் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் தப்பி தவறி ஒரு சில மாடல்களுக்கு வேறு சார்ஜ்ர் தேவைப்படுகிறது. நாம் போன் வாங்கி நன்கு அடித்து தேய்த்து இனிமேல் இது பயன்படாது என்று தீர்மானம் செய்த பிறகு புது போன் வாங்குவோம். அப்படி வாங்குகையில் வேற மாடல் வாங்கும் போது புது சார்ஜரும் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகின்றது. ஏனெனில் சார்ஜ் செய்யப்படும் போர்டு சற்று வேறுபடுவதால் பயனர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு சிரமத்தில் இருந்து மொபையில் போன் பயனர்களை விடுவிக்க, ஒரே வகையான சார்ஜரை பயன்படுத்தும் வகையில் டெக்னாலஜியை வடிவமைக்குமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இப்படியாக அனைத்து மொபைல் மற்றும் கையடக்க மின்னணு சாதனங்களுக்கு பொதுவான சார்ஜரை பொருந்தும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்ய நேற்று தொழில்துறை தொழிலதிபர்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டம் நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித்குமார் சிங் தலைமையில் நடைபெற்றது. அந்த குடத்தில் ஏற்கனவே ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த விதிமுறை தற்போது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் இதனின் சாத்தியக் கூறு என்ன என்று மதிப்பு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இது பயனர்களுக்கு மட்டும் அல்லாது சுற்றுசூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு போனுக்கு புது சார்ஜ்ர் வாங்க வேண்டும் எனில் அது பயனர்களுக்கு கூடுதல் செலவை அதகிரிக்கும். அதே போல் ஒவ்வொரு முறையும் இப்படி புது சார்ஜர் வாங்கும் பொழுது மின்னணு கழிவுகள் அதிகரிக்கும் என்பதால் குடநீ தடுக்க இதனை நடைமுறைக்கு கொண்டு வர என்ன ஏற்பாடு என்று தொழிலதிபர்களிடம் நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித் குமார் சிங் வலியுறுத்துகிறார்.
All phones same charger, all phones to have same charger, same charger for all phones, mobile charger.
உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…