Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை.. என்ன பிரச்சனை? | Instagram Not Working

Nandhinipriya Ganeshan Updated:
உலகளவில் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை.. என்ன பிரச்சனை? | Instagram Not WorkingRepresentative Image.

உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இதுகுறித்து செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் [Downdetector.com] அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம்," இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்