Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

1டிபி ஸ்டோரேஜ்...வேற லெவல் அம்சங்கள்...ரிலீஸ் ஆகும் iQoo 12! | iQoo 12 Leaked Specifications

Priyanka Hochumin Updated:
1டிபி ஸ்டோரேஜ்...வேற லெவல் அம்சங்கள்...ரிலீஸ் ஆகும் iQoo 12! | iQoo 12 Leaked SpecificationsRepresentative Image.

இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் ஆகப்போகும் iqoo 12 ஸ்மார்ட்போன் பற்றிய விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. அதுவும் இந்த போனின் பேஸ் மாடல் பற்றிய அம்சங்கள் கசிந்துள்ளது அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.

iQoo 12 விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 2K ரிசொல்யூஷன் மற்றும் 144Hz புதுப்பிப்பு வீதத்துடன் Samsung E7 AMOLED டிஸ்ப்ளேவுடன் வரலாம். மேலும் Qualcomm Snapdragon 8 Gen 3 SoC, Adreno 750 GPU உடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வதந்திகள் அடிப்படையில் 50-மெகாபிக்சல் OV50H முதன்மை சென்சார் மற்றும் 64-மெகாபிக்சல் OV64B பெரிஸ்கோப் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா செட்டப் இருக்கலாம்.

இந்த மாடல் ஸ்மார்ட்போன் 24ஜிபி ரேம் + 2 டிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டில் அறிமுகம் ஆகலாம். இந்த பேஸ் வேரியண்ட் 100W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் அளிக்கும் 5000mAh பேட்டரியுடன் வரலாம். ஆனால், லீக் ஆன தகவல் படி iQoo 12 ப்ரோ மாடல் கூடுதலாக 200W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோன்களில் அல்ட்ராசோனிக் கைரேகை ஸ்கேனர் மற்றும் USB Type-C 3.x போர்ட் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. iQoo 12 மாடல் போனின் முழுமையான விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்