Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லேட்டஸ்ட் மாடல்...வெறும் ரூ.21,999/-க்கு...பிளிப்கார்ட்டில் பலே ஆஃபர் | Infinix zero 30 5G Flipkart Order

Priyanka Hochumin Updated:
லேட்டஸ்ட் மாடல்...வெறும் ரூ.21,999/-க்கு...பிளிப்கார்ட்டில் பலே ஆஃபர் | Infinix zero 30 5G Flipkart OrderRepresentative Image.

இந்தியாவில் பிரபல பிளிப்கார்ட் இ-காமெர்ஸ் தளத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் Infinix Zero 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனின் விலை, அம்சங்கள் மற்றும் பிளிப்கார்ட்டில் எப்படி ஆர்டர் செய்தால் குறைந்த விலையில் நம்மால் வாங்க முடியும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 950 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,2160Hz PWM டிம்மிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட ஆதரவுகளுடன் வந்துள்ளது. 6.67-இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது. மேலும் ஆக்டா கோர் டைமன்சிட்டி 8020 6என்எம் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 (Android 13) மற்றும் எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) ஆகியவை மூலம் இயங்குகிறது.

லேட்டஸ்ட் மாடல்...வெறும் ரூ.21,999/-க்கு...பிளிப்கார்ட்டில் பலே ஆஃபர் | Infinix zero 30 5G Flipkart OrderRepresentative Image

கேமராவைப் பொறுத்தவரை, 108 எம்பி மெயின் கேமரா ஆனது சாம்சங் எச்எம்6 சென்சார் கொண்டு வருகிறது. அத்துடன் 13 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா உடன் பின்புறத்தில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் அமைக்கப்பட்டுள்ளது. சாம்சங் ஐசோசெல் ஜேஎன்1 (Samsung ISOCELL JN1) சென்சார் கொண்ட 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. இந்த மாடல் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியண்ட்டில் கிடைக்கும். இறுதியாக, 68W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில்ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), என்ஃஎப்சி (NFC), வை-பை 8 (Wi-Fi 8) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

லேட்டஸ்ட் மாடல்...வெறும் ரூ.21,999/-க்கு...பிளிப்கார்ட்டில் பலே ஆஃபர் | Infinix zero 30 5G Flipkart OrderRepresentative Image

இன்-டிஸ்பிளே பிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res audio) மற்றும் IP53 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் ஆகியவை கொண்டு வருகிறது. இந்த மாடல் ரோம் கிரீன், கோல்டன் ஹவர் மற்றும் பேண்டஸி பர்பிள் ஆகிய மூன்று கலர் ஆப்ஷனில் வருகிறது.  8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.23,999/-க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் ரூ.24,999/-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக்சிஸ் பேங் கிரெடிட் மூலம் ஆர்டர் செய்தால் ரூ.2000/- தள்ளுபடி கிடைக்கும். அப்போது ரூ.23,999/- மதிப்புள்ள 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் இன்பினிக்ஸ் ஜீரோ 30 5ஜி ரூ.21,999/-க்கு வாங்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்